பிளாஸ்டிக் பைகளுக்கு 'குட் பை'தமிழகத்தில் ‘மீண்டும் மஞ்சப்பை'க்கு கை கொடுப்போம் - மு.க ஸ்டாலின்
பிளாஸ்டிக் மாசுபாட்டினால் நமது பூமி தீவிரமாக பாதிப்படைந்துள்ளது. சுற்றுச்சூழலைக் காக்க மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
சென்னை: பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கும் விழிப்புணர்வையும், அதற்கு மாற்றான துணிப்பைகளையும் நாமே உபயோகிக்கும் பழக்கத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக 'மீண்டும் மஞ்சப்பை' என்ற விழிப்புணர்வு இயக்கத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார்.
ஒரு பிளாஸ்டிக் பை மக்களால் சராசரியாக பயன்படுத்தப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே, ஆனால், அவை மட்குவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் பல நூறு ஆண்டுகள் ஆகும். அதிகப்படியான இந்த பிளாஸ்டிக் மாசுபாட்டினால் நமது பூமி தீவிரமாக பாதிப்படைந்துள்ளது.
கடல்வாழ் உயிரினங்கள் உள்பட நமது சுற்றுச்சூழல் அமைப்பில் பேரழிவையும் மற்றும் நமது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளையும் இந்த பிளாஸ்டிக் மாசுபாடு ஏற்படுத்தி வருகிறது.

35 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள்
பிளாஸ்டிக் கழிவுகளினால் ஆறு, குளம், ஏரி மற்றும் கடல் மாசடைந்து, உயிரினங்களின் வளர்ச்சியை பாதிக்கின்றன. இந்தியாவில் 2019 - 20 ஆம் ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ 35 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கமடைந்துள்ளன. அதே ஆண்டில் தமிழகத்தில் ஏறத்தாழ 4 லட்சம் பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கமடைந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதேநிலை நீடித்தால் ஆறு, குளங்களில் நீருக்கு பதிலாக பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே இருக்கும் சூழல் உருவாகும். ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் அதிக ஆபத்துகள் ஏற்படுவதால், அதனை தமிழக அரசு முழுமையாக தடை செய்துள்ளது.

ரூ.3 லட்சம் அபராதம்
கடந்த 2019 ஆம் ஆண்டு இதற்கான அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை பிறப்பித்துள்ளது. மீறுவோருக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரையும், தொடர்ந்து அதே தவறை செய்பவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்தது. தனி நபர், வியாபாரிகள் உள்ளிட்டோருக்கும் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

பிளாஸ்டிக் கவர்கள் ஒழிப்பு
கொரோனா பரவும் சூழல் கருதி தடையை நடைமுறைப்படுத்தும் வகையில் தேக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் 'மீண்டும் மஞ்சப்பை' என்ற புதிய இயக்கத்தின் மூலம் பிளாஸ்டிக் கவர்களை முற்றிலும் ஒழித்து, மீண்டும் மஞ்சப்பை பயன்பாட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை பரப்புரைக்கான நிகழ்ச்சி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதில் மாநிலத்தின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.
Recommended Video

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு
இந்த நிகழ்ச்சியில், தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப்பொருட்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் விளக்கப்பட கண்காட்சி பொதுமக்களின் பார்வைக்காக சென்னை வாலாஜா சாலையில் அமைந்துள்ள கலைவானர் அரங்கத்தில் இன்று வைக்கப்பட உள்ளது. எனவே, பிளாஸ்டிக் மாற்றுப்பொருட்களுக்கான கண்காட்சியை இன்று மாலை 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிட்டு, அதனை தங்களுடைய வாழ்விலும் உபயோகித்து சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications