என் அப்பாவே கலைஞரின் தீவிர பக்தர்தான்.. பூரித்த ஓபிஎஸ்...கருணாநிதி நினைவிட அறிவிப்புக்கு வரவேற்பு
கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது
சென்னை: "என்னுடைய அப்பா ஒரு தீவிரமான கலைஞரின் பக்தர்... கலைஞரின் வசனத்தில் அனல் பறக்கும்.. பின்னடைவில் உள்ள சமூகத்தை முன்னேற்ற அந்த வசனங்கள் எப்போதும் துணை நின்றுள்ளது... கலைஞருக்கு நினைவிடம் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு என்னுடைய நன்றி" என்று ஓபிஎஸ் இன்று சட்டப்பேரவையில் பூரிப்புடன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் சில அறிவிப்புகளை இன்று வெளியிட்டார்.. அப்போது அவர் சொன்னதாவது:
சென்னை மெரினா காமராஜர் சாலையில் ரூ.39 கோடியில் 2.21 ஏக்கரில் மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படும் என்றும் கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஔி படங்களுடன் நினைவிடம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கருணாநிதி
கலைஞர் கருணாநிதிக்கு அவரின் சாதனைகளை, சிந்தனைகளை, பொதுமக்கள் அறிந்துகொள்ள காமராஜர் சாலையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் இதனை அறிவித்தார்... அத்துடன், இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி கலைஞர் கருணாநிதி என்றும், 80 ஆண்டுகள் பொது வாழ்க்கை, 70 ஆண்டுகள் பத்திரிக்கையாளர், 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர், 50 ஆண்டு கால திமுக தலைவராக இருந்தவர் கலைஞர் என்று புகழாரம் சூட்டினார்.

கலைஞர்
அதுமட்டுமல்ல, 13 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த கலைஞர், நின்ற தேர்தல் அனைத்திலும் வெற்றி பெற்றவர்... ஜனநாயகப் பாதையில் இறுதிவரை உறுதியோடு வாழ்ந்தவர், அவரை தோல்வி தொட்டதே இல்லை. வெற்றி கைவிட்டதும் இல்லை, அதுதான் கருணாநிதி என்று நெகிழ்ச்சியுடன் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

வரவேற்பு
கலைஞருக்கு நினைவிடம் கட்டப்படும் என்ற அறிவிப்பை அதிமுக மனதார வரவேற்றுள்ளது.. இதுகுறித்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓபிஎஸ் கூறும்போது, "கலைஞரின் வசனத்தில் அனல் பறக்கும்.. பின்னடைவில் உள்ள சமூகத்தை முன்னேற்ற அது எப்போதும் துணை நின்றுள்ளது... என்னுடைய அப்பா தீவிரமான கலைஞரின் பக்தர்.

கதைகள்
அவருடைய பெட்டியில் மனோகரா, பராசக்தி கதைகள்தான் இருக்கும்... அதையெல்லாம் மனப்பாடமாக ஒப்பிப்பார்.. அவர் இல்லாத நேரத்தில் நாங்கள் எடுத்து அந்த வசனங்களை படித்துள்ளோம்... கலைஞருக்கு நினைவிடம் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி... வரலாற்றில் கலைஞரின் பெயர் நிலைத்து நிற்கும். முழுமனதோடு ஒருமனதாக வரவேற்கிறோம்" என்று தெரிவித்தார்.

அதிமுக
கடந்த சில தினங்களாகவே, அதிமுக மேலிடத்தின் பேச்சு, குறிப்பாக, ஓபிஎஸ்ஸின் அணுகுமுறையில் நல்ல மாற்றம் தென்பட்டு வருகிறது.. திமுகவை பாராட்ட தொடங்கி உள்ளார்.. நேற்றைய தினம் துரைமுருகனை பாராட்டினார்.. இன்று கருணாநிதியை பாராட்டி உள்ளார்.. இது எதற்கான பாராட்டு என்று தெரியவில்லை.. அதேசமயம் அரசியல் நாகரீக மாண்பு நம் தமிழக சட்டப்பேரவையில் தென்பட்டுக் கொண்டிருப்பதையும் உணர முடிகிறது.
-
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications