ஜெய் ஸ்ரீராம் போலோ.. "பிஸ்னஸ் மேன்" கையை தூக்கிய கேப்பில்! ரூ.36000 அபேஸ்! பாஜக பிரச்சாரத்தில் திக்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பாஜக பிரச்சாரம் ஒன்றில் 36000 ரூபாய் திருடப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏப்ரல் 26 ஆம் தேதி மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்டத் தேர்தல் நடக்கிறது. இதற்காக பல்வேறு மாநிலங்களில் மிக தீவிரமாக பிரச்சாரங்கள் நடந்து வருகின்றன. 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

Men loots thousands of Money amid a business man chants Jai Shree Ram in BJP roadshow

இரண்டாம் கட்டத் தேர்தலில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மொத்தம் 2,633 வேட்புமனுக்களை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது. 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 1,206 வேட்பாளர்கள், மணிப்பூர் பிசியில் இருந்து 4 வேட்பாளர்கள் இந்த கட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

உத்தர பிரதேசத்தில் விசித்திர சம்பவம்: இந்த பிரச்சாரத்திற்கு இடையே உத்தர பிரதேசத்தில் பாஜக பிரச்சாரம் ஒன்றில் 36000 ரூபாய் திருடப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குல்பூஷன் என்ற தொழிலதிபர் தனது இரு கைகளையும் உயர்த்தி 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று முழக்கமிட்ட போது அவரிடம் பணம் திருடப்பட்டு உள்ளது. ராமாயண நட்சத்திரங்கள் அடங்கிய பாஜக ரோட்ஷோ உத்தரபிரதேசத்தின் மீரட்டில் பிரச்சாரம் செய்த போது இந்த சம்பவம் நடந்து உள்ளது.

அந்த பாஜக ரோட்ஷோ குல்பூஷன் கடையை கடந்து சென்றபோது, பாஜகவினர் கடைக்குள் வந்து இவரிடம் வாக்கு கேட்டுள்ளனர். அதன்பின் இவரை கையை தூக்க சொல்லி ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லி உள்ளனர். அவர் கையை தூக்கி ஜெய் ஸ்ரீராம் சொன்ன கேப்பில் அவரிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

​​கூட்டத்தில் இருந்து யாரோ ஒருவர் தனது பர்ஸை எடுத்ததாக குல்பூஷன் கூறி உள்ளார். அதில் ரூ 36,000 ஐ இருந்ததாக அவர் தெரிவித்தில்லார். இந்த பாஜக தேர்தல் ரோட்ஷோவின் போது பணப்பைகள் மற்றும் மொபைல்கள் மிக அதிக அளவில் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன. அதில் குல்பூஷன் பர்ஸ் ஒன்றாகும்.

"நான் என் கடையில் அமர்ந்திருந்தேன். அருண் கோவிலின் பாஜக கான்வாய் பார்த்தபடியே நின்று கொண்டு இருந்தேன். பாஜகவினர் கேட்டதால் கைகளை உயர்த்தி ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டேன். கூட்டம் அதிகமாக இருந்தது. திரும்பி வந்து பர்ஸை தேடியபோது பணம் இல்லை. அதிர்ச்சியில் மயங்கி விழுந்தேன். பாஜக பேரணியால் நான் 36,000 ரூபாயை இழந்தேன்" என்று குபூஷன் கூறினார்.

ராமாயண கெட்டப்பில் இந்த ரோடு ஷோ நடத்தப்பட்டு பாஜகவிற்காக இவர்கள் வாக்கு கேட்டுள்ளனர். மீரட் பாஜக வேட்பாளர் அருண்கோவில் பிரச்சாரத்தில் இது நடந்துள்ளது.

மீரட் பாஜக வேட்பாளர் அருண்கோவில், பிரபல டிவி சீரியலான ராமாயணத்தில் ராமர் பாத்திரத்தில் நடித்தார். இந்த நிலையில், சீதாவாக நடித்த தீபிகா சிக்லியா மற்றும் லக்ஷ்மணனாக நடித்த சுனில் லஹ்ரி ஆகியோருடன் இணைந்து ரோட்ஷோ நடத்தினர். இந்த பிரச்சாரத்தில்தான் பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. பலருக்கு இந்த கூட்டத்தில் பணம், நகை, வாட்ச், போன் காணாமல் போய் உள்ளதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+