பரபரப்பான வழக்குகளில் சிக்கினாலே மனச்சிதைவுக்கு ஆளாகிவிடுகிறார்களே!
Recommended Video
சென்னை: தமிழகத்தில் பரபரப்பான வழக்குகளில் சிக்கிக் கொள்ளும் நபர்கள் அடுத்தடுத்து மனச்சிதைவுக்கு ஆளாவது தொடர்கதையாகி வருகிறது.
2016-ம் ஆண்டு மிகப் பெரும் பரபரப்பை கிளப்பியது சுவாதி படுகொலை வழக்கு. இந்த வழக்கில் தொடக்கத்தில் மதச்சாயம் பூசப்பட்டது.
பின்னர் நெல்லையைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர்தான் சுவாதியை படுகொலை செய்தார் என கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் ராம்குமாருக்கும் சுவாதிபடுகொலைக்கும் எந்த ஒரு சம்பந்தமுமே இல்லை எனவும் கூறப்பட்டது.

ராம்குமார் மர்ம மரணம்
இந்நிலையில் சென்னை புழல் சிறையில் ராம்குமார் மின்கம்பிகளை கடித்து தற்கொலை செய்து கொண்டார்; மனச்சிதைவால் அவர் தற்கொலை செய்து கொண்டாகவும் கூறப்பட்டு அந்த வழக்கும் முடிவுக்கு வந்தது.

முகிலன் திடீர் மாயம்
அதேபோல் சமூக செயற்பாட்டாளர் முகிலனும் திடீரென மாயமானார். 5 மாதங்களுக்குப் பின்னர் திருப்பதியில் முகிலன் கைது செய்யப்பட்டு தற்போது தமிழகம் கொண்டுவரப்பட்டுள்ளார்.

முகிலனை மனநோயாளியாக்க சதி
முகிலனும் மனச்சிதைவுக்குள்ளாகி இருப்பதாக அவரது மனைவி மற்றும் நண்பர்கள் கூறியுள்ளனர். தன்னை மனநோயாளியாக்க சதி நடந்தது என முகிலும் கூறி வருகிறார்.

நிர்மலாதேவிக்கும் மனச்சிதைவு
முகிலன் விவகாரம் ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்க மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவியும் மனச்சிதைவுக்குள்ளான நிலையில் 2 நாட்களாக பரபரப்பை கிளப்பி வருகிறார். நீதிமன்றத்தில் அமர்ந்து தியானம், தர்காவில் தலைவிரிகோலமாக கதறல் என நிர்மலாதேவியால் ஏகப்பட்ட பரபரப்புகள்.
தமிழகத்தில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிற வழக்குகளில் சிக்குகிறவர்கள் அனைவருமே மனச்சிதைவுக்குள்ளாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications