சென்னை அயனாவரத்தில் மீண்டும் ஷாக்.. மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பலாத்காரம்!
சென்னை: சென்னை அயனாவரத்தில் மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அனைத்து மகளிர் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பெண்கள் மீதான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறார்கள் மீதும், மாற்றுத்திறனாளிகள் மீதும் இந்த குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. எதிர்ப்புகளை காட்டாத, அல்லது வன்முறை நடந்தாலும் வெளியில் சொல்லுவதற்கான தைரியம் போதாத பெண்கள் இலக்கு வைக்கப்பட்டு வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அப்படியான சம்பவம்தான் அயனாவரத்தில் நடந்திருக்கிறது.

அயனாவரத்தில் உள்ள இளம்பெண் ஒருவர் கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவராவார். இவருக்கு சமீபத்தில் ஸ்னாப்ஷாட் எனப்படும் சோஷியல் மீடியா மூலம் சிலர் நண்பர்களாக அறிமுகமாகியுள்ளனர். இவர்களுடன் தொடர்ந்து பேசி வந்த இளம்பெண்ணிடம், சில நாட்கள் கழித்து நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனை நம்பி சென்ற மாணவி பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். தனக்கு நேர்ந்தது குறித்து பெற்றோரிடத்தில் மாணவி கூறவே அவர்கள் போலீசில் புகார் கொடுத்திருக்கின்றனர்.
புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது. முதல்கட்டமாக ஸ்னாப்ஷாட் மூலம் பழகியவர்கள் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் கூறியுள்ளனர்.
அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி மாணவிகள் மீது வன்முறைகள் நடத்தப்படுவது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே செவிதிறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி 12 வயது மாணவி ஒருவர் இதேபோன்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். தனியார் பள்ளியில் படிந்து வந்த மாணவியை பள்ளிக்கு அழைத்து செல்லவும், திரும்ப கொண்டு வந்து விடவும் பள்ளி வாகனம் வரும். இந்த வாகனத்திற்கு அழைத்து செல்ல மாணவி தங்கியிருந்த அப்பார்ட்மென்ட் லிஃப்ட் பணியாளர்கள் உதவியுள்ளனர்.
இப்படியாக மாணவிக்கும் குற்றவாளிகளுக்கும் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கத்தை பயன்படுத்தி மாணவியை லிஃப்ட் பணியாளர்கள் முதலில் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். அதேபோல அவர்களுக்கு தெரிந்த காவலாளிகள், மற்ற பணியாளர்கள் என அனைவரும் மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை செய்த போலீஸ் 17 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது மற்றொரு மாற்றுத்திறனாளி மாணவியும் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications