ஆட்டை கடிச்சு, மாட்டை கடிச்சு.. அஞ்சல் துறையையும் விட்டு வைக்கல.. ஐபோன் 15 தான் ஹைலைட்டே
சென்னை: ஆட்டை கடிச்சு, மாட்டை கடிச்சு கடைசியில் அஞ்சல் துறையையும் விட்டுவைக்காத மோசடி நபர்கள்.. இந்த லிங்கை கிளிக் செய்தால் ஐபோன் 15 இலவசமாக கிடைக்கும் என்று செய்தி வேகமாக பரவி வருகிறது. இந்த மோசடிகளை நம்பி கிளிக் செய்ய வேண்டாம் என்றும் இது முற்றிலும் உங்களை ஏமாற்றி பணம் பறிக்க நடக்கும் வேலை என இந்திய அஞ்சல் துறை எச்சரித்துள்ளது.
மோசடியாளர்கள் இப்போது பல்வேறு வகையில் தங்கள் மோசடிகளை அரங்கேற்றி வருகிறார்கள். அமோசன் தொடங்கி அஞ்சல் துறை கைவைக்காத இடமே இல்லை.. எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி, பஜாஜ் பைனான்ஸ், மீசோ, பிளிப்கார்ட், கனரா வங்கி, ஏர்டெல் என எல்லா பெரிய நிறுவனங்கள் பெயரிலும் லிங்கில் பரிசு இருப்பதாகவும் பணம் இருப்பதாகவும் மெசேஜ்களை அனுப்பி ஏமாற்றி வருகிறார்கள். அதுவும் எப்படி என்றால் அன்றைக்கு என்ன டிரெண்டாக இருக்குமோ அதுபடியே மெசேஜ் அனுப்புகிறார்கள்.

முன்பெல்லாம் பரிசு விழுந்ததாக ஏமாற்றுவார்கள்.. அதன்பிறகு வங்கியில் இருந்து பணம் வந்துள்ளதாக ஏமாற்றினார்கள். அதன்பிறகு தள்ளுபடியில் பொருட்கள் கிடைப்பதாக ஏமாற்றினார்கள், தொடர்ந்து கேஓய்சி பெயரில் லிங்கை கிளிக் செய்ய வைத்து ஏமாற்றினார்கள். இந்த கேஒய்சி முறையில் தான் இந்தியாவில் பெரும்பாலானோர் ஏமாந்தார்கள்.
இதேபோல் ஏடிஎம் கார்டு நம்பர் கேட்பது, ஆதார் எண் கேட்பது, பாஸ்வேர்டு மாற்ற வேண்டும் என்று சொல்வது என பல புதிய வழிகளை கண்டுபிடித்து ஏமாற்றினார்கள். வேலை வேண்டுமா, பார்ட் டைம் வேலை வேண்டுமா என்றும் ஏமாற்றினார்கள். இந்நிலையில் லேட்டஸ்ட் டிரெண்டாக ஐபோன் 15 மொபைலை வைத்து ஏமாற்றி வருகிறார்கள். அதுவும் அஞ்சல்துறை பெயரை பயன்படுத்தியே ஏமாற்றுகிறார்கள்,
இது தொடர்பாக இந்திய அஞ்சலக துறை எக்ஸ் தளத்தில் எச்சரிக்கை செய்தி பதிவிடப்பட்டுள்ளது. அந்த பதிவில், " இந்திய அஞ்சல் துறை அதிர்ஷ்டசாலிகளுக்கு குலுக்கல் முறையில் ஐபோன் 15 வழங்குவதாகவும், செய்தியை 15 நபர்களுடன் பகிர்ந்தால் போனை வெல்லலாம் என்றும் வெளியாகி இருக்கும் செய்தியை நம்ப வேண்டாம்" என்று எச்சரித்தள்ளது.
"தயவுசெய்து எச்சரிக்கையாக இருங்கள்! இந்திய அஞ்சல் துறையில் அங்கீகரிக்கப்படாத வலைதளம் அல்லது எந்த லிங்க்கின் வழியாகவும் எந்தவிதமான பரிசையும் வழங்கவில்லை. இதைப் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்வதற்கு இந்திய அஞ்சலக துறையின் அதிகாரப்பூர்வமான வலைத்தளமான Indiapost.gov.in என்ற தளத்தில் தெரிந்து கொள்ளுங்கள்" என்று ட்வீட் பதிவிடப்பட்டுள்ளது
மேலும் இந்திய அஞ்சல் துறை அதிர்ஷ்டசாலிகளுக்கு குலுக்கல் முறையில் ஐபோன் 15 வழங்குவதாகவும், செய்தியை 15 நபர்களுடன் பகிர்ந்தால் போனை வெல்லலாம் என்று வரும் செய்திகளை உண்மை என்று நினைத்து யாருக்கும் ஃபார்வேர்ட் செய்துவிடாதீர்கள்.. அதுமட்டுமில்லாமல் சந்தேகிக்கப்படக்கூடிய எந்த லிங்க்கையும் கிளிக் செய்ய வேண்டாம் என்று அஞ்சல்துறை எச்சரித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications