நாளை சீன அதிபர் வரும் போது மெட்ரோ ரயிலும் நிறுத்தப்படுகிறது.. சின்னமலை-மீனம்பாக்கம் இடையேதான்!
Recommended Video
சீன அதிபர் வரும் போது சின்னமலை-மீனம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் நிறுத்தப்படும்
நாளை சீன அதிபர் வரும் போது மெட்ரோ ரயிலும் நிறுத்தப்படுகிறது.. சின்னமலை-மீனம்பாக்கம் இடையேதான்!
சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை விமான நிலையம் வரும் நேரத்தில் சின்னமலை-மீனம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 1.30 மணி அளவில் தனி விமானத்தில் சென்னை வருகிறார். இதேபோல் நாளையே பிரதமர் மோடியும் சென்னை வருகிறார். இவர்கள் இவரும் ஒரே நாளில் சென்னை வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்ட்டுள்ளன.
குறிப்பாக சீன பிரதமர் ஜி ஜின்பிங் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இரண்டு நாள் பயணமாக சென்னை அருகே மகாபலிபுரத்திற்கு வருவதால் இதுவரை சென்னையில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்து மாற்றம்
பொதுவாக பிரதமர் மோடி வரும் போது கூட சென்னையில் போக்குவரத்தில் பெரிய மாற்றங்கள் இதுவரை செய்யப்பட்டது கிடையாது. ஆனால் சீன அதிபரின் வருகைக்காக நேர வாரியாக போக்குவரத்தை திருப்பிவிடும் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக பாரம்பரிய வரவேற்பு
சீன அதிபர் ஜி ஜின்பிங் நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 1.30 மணி அளவில் தனி விமானத்தில் சென்னை வந்திறங்குகிறார். அவருக்கு தமிழக பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் அளிக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் வரவேற்பு அளிக்க உள்ளார்கள்

அரைமணி நேரம் நிறுத்தம்
சீன அதிபர் வரும் நேரத்தில் விமான நிலையத்தையொட்டி அமைந்துள்ள ரயில் நிலையங்களில் ரயில்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் விமான நிலையத்தில் இறங்கி அவர் ஓட்டல் செல்லும் வரை அதாவது 1.30 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை ரயில்கள் நிறுத்தப்படலாம் என தெரிகிறது.

சிறுது நேரம் நிறுத்தம்
குறிப்பாக சீன அதிபர் வரும் நேரத்தில் சின்னமலை முதல் மீனம்பாக்கம் வரையில் மெட்ரோ ரெயில்கள் நிறுத்தப்பட்டு தாமதமாக இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதேபோல் புறநகர் மின்சார ரயில் சேவையிலும் சிறிதுநேரம் நிறுத்தப்படலாம் என தெரிகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications