கிழவிகளை கட்டிப்பிடித்து பாசம் காட்டினாரே எம்ஜிஆர்! மாமல்லபுரத்தின் தேவதூதன் விஜய் மக்களிடம் போகலயே?
சென்னை: மாமல்லபுரத்தில் உள்ள விடுதியில் கரூரில் உயிரிழந்தவர்களின் 41 பேர் குடும்பத்தினரையும் நடிகர் விஜய் தனித்தனியே சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.. ஆனால், கரூரின் 41 குடும்பத்தையும் இங்கே அழைத்து பேசியது கட்டாயம் விமர்சனத்துக்கு உள்ளாகும் என்றும் அவர்களை கரூருக்கே சென்று சந்திப்பது என்பதே சரியானதாக இருந்திருக்கும் என்றும் பத்திரிகையாளர் அந்தணன் கருத்து கூறியிருக்கிறார்.
Aagayam Tamil என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் அந்தணன், கரூரின் 41 குடும்பத்தையும் இங்கே சென்னைக்கு அழைத்துள்ளது கட்டாயம் விமர்சனத்துக்குள்ளாகும்.. 41 குடும்பங்களையும் கரூருக்கே சென்று சந்திப்பது சரியானதாக இருக்கும்.

கரூரில் நடைமுறை சிக்கல்
ஆனால், அங்கு செல்வதில் சில நடைமுறை சிக்கல்கள் தவெகவுக்கு இருப்பதாக சொல்கிறார்கள்.. காவல்துறை அனுமதி, கல்யாண மண்டப வசதிகள் இல்லாதது, செக்யூரிட்டி குறைவு போன்ற காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.. கரூருக்கு விஜய் செல்லாததை பலர் விமர்சித்தாலும், கரூர் குடும்பத்தினர் இதனை எதிர்க்கவில்லை.
எப்படிப் பார்த்தாலும் ஒரு மாத அமைதியை ஏற்றுக் கொள்ளவே முடியாது.. என்னதான் காரணம் சொன்னாலும் அது விமர்சனமாகவே பார்க்கப்படும்.. உலகத்திலேயே இப்படியொரு அரசியல் கட்சியை பார்த்ததும், கேள்விப்பட்டதும் இல்லை.
அசௌகரியங்கள்
தன்னால் ஒரு கூட்டத்தில் லட்சம் பேரை திரட்டமுடியும் என்று நம்புபவர், அதனால் ஏற்படும் அசௌகரியங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கான சகிப்புத்தன்மை இல்லாமல், அரசியலுக்கு வருவது சரியில்லை.. அரசியல் கட்சியின் முழுநேர வேலையே மக்களுக்கான சேவை செய்வதும், மக்களுக்காக, மக்களுடன் இருப்பதும்தான்.
அதைவிட்டுவிட்டு, வெளியே வரவே மாட்டேன், மாதம் ஒருமுறைதான் பேசுவேன், அனைவருடனும் இணைந்து செல்வது கஷ்டம் என்றால், இப்படியொரு அரசியல் கட்சி தேவையா? என்ற சந்தேகம்தான் வருகிறது. இதையெல்லாம் எப்படி விஜய் முறியடிக்க போகிறாரோ தெரியவில்லை.
கிழவிகளை கட்டிப்பிடித்து
எம்ஜிஆரை விட பெரிய நபர் உலகத்திலேயே கிடையாது.. அப்படிப்பட்ட எம்ஜிஆரே பல கிழவிகளை கட்டிப்பிடித்து அணைத்து பாசத்தை காட்டியிருக்கிறார்.. அப்படியிருக்கும்போது மக்களிடம் நெருங்கவே மாட்டேன் என்ற விஜய்யின் அரசியல் சாத்தியமா?
ஒரு தலைவரை பற்றி மக்கள் பேசுவதற்கு சம்பவங்கள் நிறைய இருக்க வேண்டும். காமராஜர், அண்ணா எம்ஜிஆர், கலைஞர் பற்றி அப்படித்தான் இன்னமும் பேசி கொண்டிருக்கிறார்கள்.. அதுபோல விஜய்க்கு என்ன சம்பவம் இருக்கு? மக்களை சந்தித்தால்தானே அதுபோன்ற சம்பவங்களை பெற முடியும்?
விஜய்க்கு அட்வைஸ்
விஜய்யுடன் இருப்பவர்களும் இதையெல்லாம் அவரிடம் சொல்ல மாட்டார்கள்.. ஏனென்றால் ஒரு ஹீரோ, தனக்கு அட்வைஸ் செய்பவர்களை தன் பக்கத்தில் வைத்து கொள்ளவே மாட்டார்..
குறிப்பிட்ட லிமிட்டை தாண்டி வராமல், அதேசமயம் தான் சொல்வதை மட்டுமே கேட்கக்கூடிய ஏவலாட்களை மட்டுமே உடன் வைத்து கொள்வார்கள். இதில் ஒன்றிரண்டு டாப் நடிகர்கள் விதிவிலக்குண்டு. எனவே ஒரு ஹீரோ அரசியலுக்கு வரும்போது வரக்கூடிய நடைமுறை சிக்கல்கள்தான் இவையெல்லாம்.
தேவதூதன் விஜய்
விஜய் நினைத்தால் ஒரு நொடியில் அவர் மீதான விமர்சனங்களை மாற்றிவிட முடியும். மக்களோடு மக்களாக இறங்குகிறேன், என்று முடிவெடுத்தால், தவெகவில் உள்ள சிக்கல்களை எல்லாம் முறியடித்து, தேர்தலை சிறப்பாக எதிர்கொள்ள முடியும்
அந்தளவுக்கு மக்களுக்கு விஜய் மீதும் அபிமானம் உள்ளது.. ஏனென்றால் திமுக மீது வெறுப்பு என்றால், அவர்கள் அதிமுகவை ஆதரித்துவிட்டு போவார்கள்..
ஆனால், இங்கே விஜய்யை ஒரு தேவதூதனாக பார்க்கிறார்கள்.. விஜய் என்ற பிம்பத்தை ரசிக்கிறார்கள்.. அப்படி அவர்கள் நினைப்பதால்தான், இந்த கரூர் விஷயத்தை அவர்களால் ஏற்றுக் கொள்ள, மன்னிக்க முடிந்தது. இதுவே வேறு யாராவது செய்திருந்தால், அடித்து துவம்சம் செய்திருப்பார்கள். விஜய் மீதான இந்த ஈர்ப்பும், பாசமும்தான் பலருக்கும் குழப்பத்தை தந்துள்ளது.












Click it and Unblock the Notifications