கொரோனாவுக்கு தடுப்பூசி... நம்பிக்கையூட்டும் தமிழர்... ஆய்வு பணிகள் தீவிரம்
சென்னை: உலகை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாத்துகொள்ள தமிழகத்தை சேர்ந்த ஸ்டாலின் ராஜ் என்ற ஆராய்ச்சியாளர் புதிய தடுப்பூசியை கண்டறிந்து வருகிறார்.
Recommended Video
வைரஸ் தொடர்பாக கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேல் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் இவர், திருவனந்தபுரத்தில் மத்திய அரசுக்கு கீழ் இயங்கும் இந்திய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
கொரோனோ அச்சுறுத்தலை முறியடிக்க வேண்டும் என்ற சபதத்தோடு தடுப்பூசியை ஆய்வு செய்து வரும் ஸ்டாலின் ராஜ், ஆராய்ச்சியில் முழுவீச்சாக ஈடுபட்டுள்ளார்.

அலறும் உலகம்
கொரோனோ என்ற ஒற்றை வார்த்தை ஒட்டுமொத்த நாடுகளையும் அலற வைத்திருக்கிறது. சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸ் தாக்குதல் இன்று இந்தியா உட்பட பல நாடுகளை குலை நடுங்க செய்துள்ளது. சாதாரண சளி, காய்ச்சலில் தொடங்கி உடலில் உள்ள பிரதான உறுப்புகளை படிப்படியாக செயலிழக்க வைத்து உயிரை பறிக்கும் ஆபத்தான வைரஸ் என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும்,கொரோனோ பாதிப்பில் இருந்து மீள பல நாடுகளிலும் ஆராய்ச்சியாளர்கள் புதிய மருந்தை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

தடுப்பூசி
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை பூர்வீகமாக கொண்ட ஸ்டாலின் ராஜ் என்பவர், கொரோனா தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசியை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவருடன் 5-க்கும் மேற்பட்டோர் இந்த ஆய்வில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பயோ டெக்னாலஜி துறையில் டாக்டர் பட்டம் பெற்றுள்ள ஸ்டாலின் ராஜ், பெல்ஜியம், நெதர்லாந்து, உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் உள்ள எராஸ்மஸ் என்ற அதிநவீன ஆராய்ச்சி நிலையத்தில் வைரஸ் தொடர்பாக பல ஆய்வுகளை நடத்தி வெற்றி பெற்றிருக்கிறார்.

புரோட்டின்
ஸ்பைக் என்ற புரோட்டினை குளோன் செய்து வைரஸிற்கான ஆண்டிபாடிகள் கண்டறியும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனிடையே திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் இன்ஸ்டியூட் ஆஃப் அட்வான்ஸ்டு வைராலஜி நிறுவனம் மூலம், கொரோனோ வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள கேரள அரசு அனைத்து முன்னேற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. Biological Safety Levels (BSL) 3 (உயிரியல் பாதுகாப்பு நிலைகள் 3) என்ற ஆய்வகங்கள் இங்கு இல்லாதது தடுப்பூசி கண்டறியும் பணிகளில் கால தாமதம் ஏற்படச் செய்கிறது.

பிரத்யேக தகவல்
இதனிடையே ஸ்டாலின் ராஜை நாம் தொடர்பு கொண்டு பேசியபோது அவர் கூறியதாவது, ''கொரோனோ தடுப்பு மருந்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன், அதாவது கொரோனோ வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கையாக போட வேண்டிய தடுப்பூசியை எங்கள் குழு ஆய்வு செய்து வருகிறது. அந்த ஆய்வு முடிவடைய குறிப்பிட்ட நேரம், காலம் எல்லாம் சொல்ல முடியாது. ஆனால் விரைவில் ஆய்வு வெற்றி பெற்று தடுப்பூசியை வெளிக்கொண்டு வர தீவிரமாக உழைத்து வருகிறோம். மேற்கொண்டு எந்த மாதிரியான சோதனைகள், ஆய்வுகள் என்பது பற்றியெல்லாம் கூறுவது ஏற்புடையதாக இருக்காது''.

யார் முதலில்?
மேலும் தொடர்ந்து பேசிய ஸ்டாலின் ராஜ், '' கொரோனா தடுப்பு மருந்தை நான் மட்டும் கண்டறிய முயற்சி செய்யவில்லை. என்னை போல் பல ஆராய்ச்சியாளர்கள் பல நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனால் நான் மட்டுமே இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். என்னை போல் பல ஆராய்சியாளர்கள் சர்வதேச அளவில் இந்த கொரோனா தாக்குதலில் இருந்து மனிதர்களை காப்பாற்ற உழைத்து வருகின்றனர். அதனால் முதலில் யாருடைய சோதனை வெற்றிபெற்று தடுப்பு மருந்து வெளிவந்தாலும் மகிழ்ச்சியே'' எனத் தெரிவித்தார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications