இந்த வேலைகளை எல்லாம் AI தூக்கி சாப்பிட்டுவிடும்.. லிஸ்ட் போட்ட மைக்ரோசாப்ட்! உஷார் மக்களே!
சென்னை: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இல்லாத இடமே இல்லை. எதிர்காலத்தில் மனித தலையீட்டுடன் செய்யும் வேலைகள் குறைவாகவே இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில், 40 வேலைகளை AI தூக்கி சாப்பிட்டு விடும் என்று மைக்ரோசாப்ட் லிஸ்ட் போட்டிருக்கிறது.
AI-ன் தந்தை எனப் போற்றப்படும் ஜெஃப்ரி ஹின்டன் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சத்யா நாதெள்ளா ஆகியோர், இந்த ஆண்டு AI பல பணிகளை காலி செய்யும் என எச்சரிக்கையைத் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்சனை ஒரு மிக முக்கியமான மற்றும் சர்ச்சைக்குரிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது Copilot AI மூலம் சுமார் 2 லட்சம் பணி சூழல்களை ஆய்வு செய்திருந்தது. அதில் 40 பணிகளை AI முழுமையாக செய்யும் என்று கண்டுபிடித்திருக்கிறது. அதன்படி மொழி, அனாலிடிக்ஸ், தகவல்களை கையாளுதல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட வேலைகள்தான் முதலில் பாதிக்கப்படும்.
விரிவாக சொல்வதெனில் மொழிபெயர்ப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், எடிட்டர்கள், எழுத்து பிழையை சரி பார்ப்பவர்கள் ஆகியோர் தங்கள் வேலையை இழக்க நேரிடும். இதற்கு அடுத்து கஸ்டமர் சர்வீஸ் சென்டர் முழுக்க இனி AI தான் வரப்போகிறது. அதேபோல டெலிமார்கெட்டிங் செய்பவர்கள், டிராவல் ஏஜெண்டுகள், விற்பனை பிரதிநிதிகளின் வேலை காலியாகும்.

அதேபோல டேட்டா சயின்டிஸ்ட்கள், வெப் டிசைனர்கள், புள்ளியியல் உதவியாளர்கள், கணிதவியலாளர்கள், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், புவியியலாளர்கள், ரேடியோ டீஜேக்கள், விமான ரயில் உதவியாளர்கள், மாடல்கள் ஆகியோரின் வேலையும் படிப்படியாக காலியாகும்.
இப்படி சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான வேலைகளை, AI வைத்து பரிசோதித்து பார்க்கப்பட்டது. இதில், எந்த வேலையை AI சிறப்பாக செய்கிறதோ அதற்கு மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டு வந்தன. அதன் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட வேலைகளை AI மிக சிறப்பாக செய்யும் என்பது தெரிய வந்திருக்கிறது.
இந்த வேலைகள் அழியும் என்றாலும், மிச்ச சொச்சம் இருக்கும் வேலைகள், அப்படியே மாறப்போகிறது. அதாவது வேலை செய்யும் முறை மாறும். இனி இந்த துறைகள் AI இல்லாமல் இயங்காது. எனவே AI-ஐ கற்று வைத்துக்கொள்வது இந்த வேலையை தக்க வைத்துக்கொள்ள உதவும் என மைக்ரோசாப்ட் கூறுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications