சென்னையின் நொச்சிக்குப்பம் பீச்சில் நள்ளிரவு! யாரந்த பெண்? டிரைவர் உயிரிழப்பு சம்பவத்தில் அதிர்ச்சி
சென்னை: சென்னை மெரினா பீச்சில் கள்ளக்காதலியை சந்திப்பதற்காக இரவு நேரம் கிளம்பியிருக்கிறார் ஆட்டோ டிரைவர் அந்தோணி.. ஆனால் கிளம்பி பீச்சுக்கு செல்லும்போதே பிரச்சனை ஆரம்பமாகி உள்ளது.. இதனால் ஏற்பட்ட விவகாரம்தான் கொலை வரை சென்றிருப்பதாக தெரிகிறது. அதுமட்டுமல்ல, இந்த கொலையில் கல்லூரி மாணவர் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். இந்த மாணவர் யார் என்று தெரியவில்லை. அவரையும் போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.
சென்னை மெரினா நொச்சிக்குப்பம் லூப் சாலை அருகே உள்ள கடற்கரை பகுதியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு, ஒருவரை மர்மநபர்கள் அடித்து தாக்கியிருக்கிறார்கள்..

நேற்று காலை அந்த பகுதியில் வாக்கிங் சென்ற பொதுமக்கள், மணலில் மயங்கி விழுந்து கிடந்த நபர் குறித்து உடனே மெரினா போலீசுக்கு தகவல் தந்தனர்..
விரைந்துவந்த போலீசார் உடம்பெல்லாம் ரத்த காயங்களுடன் மயங்கி விழுந்து கிடந்த நபரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். ஆனால், அந்த நபர் நேற்று காலை 8 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
கள்ளக்காதலி
இதையடுத்து அவர் யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, இறந்த நபரின் சட்டை பாக்கெட்டில் ஏடிஎம் கார்டு இருந்ததை கண்டனர்.. அதை எடுத்து பார்த்து விசாரித்தபோது, இறந்த நபர் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த 40 வயது ஆட்டோ டிரைவர் அந்தோணி என்பது தெரியவந்தது.
அந்தோணிக்கு திருமணமாகி, மனைவி, குழந்தைகள் உள்ளனர். எனினும், நொச்சிக்குப்பத்தில் மீன் விற்கும் பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது.. இந்த மீன் விற்கும் பெண்ணுக்கும் திருமணமாகி 2 பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர்களது கள்ள உறவு தெரிந்து மீன் விற்கும் பெண்ணின் குடும்பத்தினர் அந்தோணியை கண்டித்துள்ளனர். அந்த பகுதிக்கு வர வேண்டாம் என்று சொல்லி அடித்தும் விரட்டியடித்துள்ளனர்.
ஆட்டோ டிரைவர் அந்தோணி
எனினும் இந்த உறவு தொடர்ந்து வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு கள்ளக்காதலர்கள் பீச்சில் சந்தித்து பேசியிருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் அந்தோணியை வெட்டி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
எனவே, அந்த கும்பல் யார் என்று அடுத்தக்கட்ட விசாரணையில் இறங்கிய போலீசார், அங்கிருக்கும் சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்ய துவங்கினர்.. இந்நிலையில், அந்தோணி கொலையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கூடுதலாக வெளியாகியிருக்கின்றன..
அதாவது, நேற்று முன்தினம் இரவு கள்ளக்காதலியை சந்திப்பதற்காக பீச்சுக்கு கிளம்பியிருக்கிறார் அந்தோணி. தன் அக்காவுக்கு குழந்தை பிறந்துள்ளதால், அதை பார்த்துவிட்டு வருவதாக மனைவியிடம் பொய் சொல்லிவிட்டு பீச்சுக்கு கிளம்பி வந்துள்ளார்..
நொச்சிக்குப்பம் பீச்சில்
ஆனால், வரும் வழியில் வள்ளூவர் கோட்டம் அருகே போக்குவரத்து போலீசார் அவரை மடக்கி சோதனை செய்திருக்கிறார்கள்.. அப்போது அந்தோணி மது அருந்தியிருந்தது உறுதியானது. இதையடுத்து, போலீசார் அவரது ஆட்டோவை பறிமுதல் செய்து, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துவிட்டார்களாம்.
இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் அந்தோணி, வேறொரு ஆட்டோவில் ஏறி மெரினா நொச்சிக்குப்பம் பகுதிக்கு சென்றார். அங்கு தன்னுடைய கள்ளக்காதலியை சந்தித்து, ரூ.10 ஆயிரம் பணம் கேட்டுள்ளார்..
அதற்கு அந்த பெண்ணும், "காலையில் பணத்தை தருகிறேன்" என்று கூறியதாகத் தெரிகிறது. அபராத தொகையை கட்டிவிட்டுதான் ஆட்டோவை மீட்க முடியும், அபராத தொகையை வாங்க மறுபடியும் நொச்சிக்குப்பத்துக்குதான் வரவேண்டியிருக்கும் என்பதால், அந்தோணி இரவு முழுவதும் அதே நொச்சிக்குப்பம் பீச் மணலில் படுத்து தூங்கியிருக்கிறார். அப்போதுதான் அந்தோணி மர்மநபர்களால் கொல்லப்பட்டுள்ளார்..
யாரந்த கல்லூரி மாணவர்?
அதுமட்டுமல்ல, அந்தோணியை தாக்கியவர்கள், சென்னையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் பயிலும் மாணவரும் அவரது நண்பர்களும் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது..
பலமுறை சொல்லியும் அந்தோணி கள்ளக்காதலை கைவிடாத நிலையில், அந்த ஆத்திரத்திலேயே இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே கல்லூரி மாணவரை பிடித்தால்தான், இந்த கொலைக்கான அனைத்து உண்மையும் வெளிவரும் என்பதால் அவரை வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்.
-
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications