மாணவர்கள் பலரும் டிசி வாங்கவில்லை.. ஆப்செண்ட் எண்ணிக்கை அதிகரிக்க இதுதான் காரணம்.. அன்பில் மகேஷ்!
பிளஸ் 2 தேர்வை எழுதாத மாணவர்கள் குறித்து அன்பில் மகேஷ் விளக்கம் கொடுத்துள்ளார்.
சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதாத மாணவர்களில் பலரும் தொழிற்பயிற்சி, பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அந்த மாணவர்கள் பள்ளிகளில் இருந்து டிசி பெற்றுக் கொள்ளாததால் மாணவர்களின் பெயர் வருகைப் பதிவேட்டில் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், அவர்களை கழித்த பின்னரே தேர்வு எழுதாத மாணவர்கள் எண்ணிக்கை தெரிய வரும் என்று அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது முதல் நாள் நடைபெற்ற தமிழ்த் தேர்வை 50 ஆயிரத்து 674 மாணவர்கள் எழுதாமல் ஆப்சென்ட் ஆனது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக நேற்று நடைபெற்ற ஆங்கிலத் தேர்வையும் 50 ஆயிரம் பேர் எழுதவில்லை. இது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிளஸ் 2 தேர்வுக்கு ஆப்செண்ட்
இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் மாணவர்கள் தேர்வு எழுதாததற்கான காரணத்தை அறியவும், தேர்வு எழுதாத மாணவர்கள் அடுத்தடுத்த தேர்வுகளை எழுத வைக்க நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தி இருந்தார்.

வருகைப் பதிவேடு
இதனிடையே குறைந்த நாட்கள் பள்ளிகளுக்கு வந்தாலும், தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்றும், வருகை பதிவேடு விதிகள் தளர்வு செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியது. இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், தற்போது தேர்வு எழுதும் மாணவர்கள் கொரோனா பரவல் காரணமாக 10ம் வகுப்பு ஆல் பாஸ் செய்யப்பட்டவர்கள்.

அன்பில் மகேஷ் விளக்கம்
அதனால் அவர்களுக்கு சிறப்பு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் வருகை பதிவேடு 75 சதவிகிதம் இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். வருகை பதிவேடு விதிகள் தளர்வு என்ற தகவல் தவறானது. அப்படி செய்தால் மாணவர்கள் யாரும் பள்ளிகளுக்கு வர மாட்டார்கள் என்று தெரிவித்தார். இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ், தேர்வு எழுதாத மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார்.

டிசி வாங்காத மாணவர்கள்
அதில், பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதாத மாணவர்களில் பலரும் தொழிற்பயிற்சி, பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். அவர்கள் பள்ளிகளில் இருந்து டிசி பெற்றுக் கொள்ளாததால் மாணவர்களின் பெயர் வருகைப் பதிவேட்டில் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த மாணவர்களின் எண்ணிக்கையை கழித்த பின்னர், எவ்வளவு மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது தெரிய வரும் என்று தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications