'சேப்பாக்கத்தின் செல்லப்பிள்ளை உதயநிதி.. அவரை தமிழ்நாடே கொண்டாடும் நாள் வரும்..' அன்பில் மகேஷ் பளீச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் செல்லப்பிள்ளையாகவே உதயநிதி மாறிவிட்டார் என்று தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகமே உதயநிதி ஸ்டாலினை கொண்டாடும் நாள் மிக விரைவில் வரும் என்றும் புகழ்ந்து தள்ளினார்.

திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு உதயநிதி ரசிகர் மன்றம் சார்பிலும் திமுக சார்பிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

உதயநிதி பிறந்தநாள்

உதயநிதி பிறந்தநாள்

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது, பெரம்பூரை அடுத்துள்ள எருக்கஞ்சேரி தனியார் பள்ளிகள் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மக்களுடன் நிற்கும் முதல்வர்

மக்களுடன் நிற்கும் முதல்வர்

அப்போது பேசிய அமைச்சர் மகேஷ், "கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்படும்போது, கோட்டையில் இருந்து கொண்டே ஆர்டர் போடும் முதலமைச்சர் நமது முதலமைச்சர் கிடையாது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கே நேரில் சென்று பார்வையிட்டு, அதைச் சரிசெய்யும் முதலமைச்சரைத் தான் நாம் இப்போது பெற்றுள்ளோம். நாட்டிலேயே மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் முதலமைச்சராக நம் முதல்வர் இருந்து வருகிறார். பொதுமக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க முதல்வரே நேரடியாகக் களத்தில் இறங்கி ஆய்வு செய்து வருகிறார்.

சேப்பாக்கம் தொகுதியின் செல்லப்பிள்ளை

சேப்பாக்கம் தொகுதியின் செல்லப்பிள்ளை

இளைஞர் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் செல்லப்பிள்ளையாகவே மாறிவிட்டார். அங்குள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் அவரே நேரடியாகச் சென்று, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு, அதைச் சரி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.

தமிழ்நாடே கொண்டாடும்

தமிழ்நாடே கொண்டாடும்

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுக்க பரப்புரை செய்து அயராது உழைத்தார். இவரது உழைப்பை நாங்கள் அருகில் இருந்து பார்த்துள்ளோம். எனவே, அவர் எவ்வளவு கடினமான உழைப்பாளி என்பது எங்களுக்குத் தெரியும். சேப்பாக்கம் தொகுதி மக்கள் மட்டும் அவரை சொந்தம் கொண்டாடினால் போதாது. ஒட்டுமொத்த தமிழ்நாடே உதயநிதி ஸ்டாலினை கொண்டாடும் நாள் மிக விரைவில் வரும்" என்று அவர் கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

நலத்திட்ட உதவிகள்

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தையல் இயந்திரம், மிதிவண்டி, அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+