“தவெக தொண்டர்கள் மெச்சூரிட்டி ஆகிட்டாங்க.. விஜய் விசிலடிச்சான் குஞ்சுகளாகி விட்டாரா?”: அன்பில் மகேஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தவெக தொண்டர்கள் முதிர்ச்சி அடைந்து விட்டனர். ஆனால், விஜய் முதிர்ச்சி அடையாமல் விசில் அடிச்சான் குஞ்சு போல பேசி உள்ளார்" என விமர்சித்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாட்டில், அக்ட்சியின் தலைவர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசி இருந்தார். குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலினை ' ஸ்டாலின் அங்கிள்' என்று விஜய் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது. தவெக மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து விமர்சித்த தவெக தலைவர் விஜய்க்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Vijay tvk dmk

இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், "தமிழகத்தையும், தமிழக மக்களின் மனநிலையும் புரிந்து கொண்டு அரசியல் செய்ய வர வேண்டும். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து விட்டோம் என்ற ஒரே நோக்கத்தில் தமிழகத்தில் ஆளும் திமுகவை வசை பாடுவதை விஜய்யும் அவரது தொண்டர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் விசில் அடிச்சான் குஞ்சு போல இன்று நம்மை யாரும் கூறி விடக்கூடாது என்று விஜய் பேசி இருந்தார். தற்போது, இரண்டாவது மாநில மாநாட்டில் தொண்டர்கள் முதிர்ச்சி அடைந்து விட்டனர். ஆனால், விஜய் முதிர்ச்சி அடையாமல் விசில் அடிச்சான் குஞ்சு போல பேசி உள்ளார்." என விமர்சித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+