Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பருப்பால் வெறுப்பான மக்கள்.. எகிறி அடித்த எடப்பாடி! உங்களுக்கு இது அழகா? அமைச்சர் சக்கரபாணி சுளீர்.!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்திலுள்ள ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் நியாய விலைக் கடைகளில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது என தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் பதிலளித்துள்ளார்.

தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக டெண்டர் பிரச்சினை எழுந்ததாகவும் இதன் காரணமாகவே ஆங்காங்கே சில இடங்களில் துவரம் பருப்பு பாமாயில் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக, மே மாதத்தில் பெற வேண்டிய பொருட்களை ஜூன் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

Chakrapani dmk ration shop

இதற்கிடையே மே மாதத்திற்கான பருப்பு மற்றும் பாமாயிலை நியாய விலைக் கடைகள் வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

ஏற்கனவே ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான பொருட்கள் வழங்கப்படாத நிலையில், ஜூன் மாதத்திலும் அத்யாவசிய பொருட்கள் வழங்கப்படவில்லை எனவும், இதனால் ஏழை எளிய மகக்ள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளன. இதனையடுத்து பொதுமக்களுக்கு பருப்பு மற்றும் பாமாயில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கண்டன அறிக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில் நியாய விலைக் கடைகளில் ஜுன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது என தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் அதிமுக ஆட்சியில் 2017ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் (அதுவும் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்ற பிப்ரவரி மாதத்தில்) துவரம் பருப்பு மற்றும் பாமாயில் முற்றிலுமாக விநியோகிக்கப்படவில்லை.

மே மற்றும் ஜுன் மாதங்களில் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று, கொள்முதல் செய்து அவர்கள் ஆட்சியில் போல் இல்லாமல் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் எல்லோருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக 18.06.2024 அன்று விரிவாக அறிக்கை வெளியிட்டு மே மாதம் பெற்றுக்கொள்ள இயலாதவர்கள் ஜுன் மாதம் முழுதும் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தேன். அதன்படி மே மாதத்திற்கான துவரம் பரும்பு மற்றும் பாமாயில் முற்றிலும் நகர்வு செய்யப்பட்டுக் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்டு விட்டன.

27.06.2024 அன்று உணவுத்துறை மானியக் கோரிக்கையின் போதும் இதுபற்றிக் குறிப்பிட்டு ஜுன் மாதம் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ளாதவர்கள் ஜுலை மாதம் முழுதும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தேன். அதன்படி அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஜூன் மற்றும் ஜுலை மாதங்களுக்குத் துவரம் பருப்பும் பாமாயிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இதைத் தெரிந்து கொள்ளாமல் வேண்டுமென்றே கழக அரசு மீது வீண்பழி சுமத்தித் தன் "X" பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் தன் ஆட்சிக் காலத்தில் இரண்டு மாதங்கள் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் யாருக்கும் வழங்காமல் இருந்ததை எண்ணிப் பார்க்காமல் அனைவருக்கும் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கி வரும் கழக ஆட்சியைப் பற்றிக் குறை கூறுவது அழகா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+