கும்பிட்டு கேட்கிறேன்.. இனிமே இப்படி செய்யாதீங்க.. எம்.எல்.ஏக்களிடம் உணர்ச்சிவசப்பட்ட துரைமுருகன்!
சென்னை : கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன் சட்டப்பேரவையில் முகஸ்துதி செய்யாதீர்கள், எம்.எல்ஏக்கள் உங்கள் தலைவரை புகழ்ந்து பேச வேண்டாம், வர்ணனை செய்து நேரத்தை வீணடிப்பது சட்டமன்றத்துக்கு அழகல்ல என அமைச்சர் துரைமுருகன் எம்.எல்.ஏக்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.
சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் பேசும்போது தங்கள் தலைவர்களைப் பற்றி புகழ்ந்து பேசுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஒவ்வொருவரும் பேச வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தங்கள் தலைவர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிப்பதால் சட்டமன்ற நேரம் வீணாவதாக சபாநாயகர் உட்பட பலரும் அவையில் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக உறுப்பினர்கள் தன்னை புகழ்ந்து பேசுவதை தவிர்க்கவேண்டும் என அறிவுறுத்தினார்.

துரைமுருகன் வேண்டுகோள் : சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் தங்கள் தலைவர்களைப் புகழ்ந்து முகஸ்துதி பாடுவது பற்றிப் பேசிய அமைச்சர் துரைமுருகன், "இந்த மன்றம் உயர்வானது. நாமெல்லாம் இந்த இடத்தில் வந்து உட்கார்ந்திருக்கிறோம். நம் தொகுதியில் உள்ள லட்சக்கணக்கான மக்களில் நமக்குதான் அந்த பாக்கியம் கிடைத்துள்ளது. இந்த மன்றத்தில் நாம் இருந்தோம் என்பதே நம்முடைய வருங்கால சந்ததியருக்கு ஒரு பெருமை. அந்த பொறுப்பை நாம் சரிவர செய்ய வேண்டும்.
இந்த மன்றத்தில் நீண்டகாலம் பெரிய பெரிய மனிதர்கள் எல்லாம் இருந்தார்கள். நானும் 50 ஆண்டுகளை கடந்து விட்டேன். எனக்கு ஒரேயொரு குறை உள்ளது. முதலமைச்சருக்கும் அந்த குறை உள்ளது. ஒரே ஒரு குறை,முகஸ்துதி. உறுப்பினர்கள் பேசும்போது வர்ணனையை விட்டுவிட்டு நேரடியாக சப்ஜெக்ட்டுக்கு வாருங்கள். பாதி நேரத்தை வர்ணனையிலேயே செலவழித்து விடுகிறீர்கள். அதனால் யாராவது திருப்திபடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? இல்லை. அந்த நேரத்தை வீணடித்து விட்டோமே என்று வருத்தம்தான் இருக்கும்.

கும்பிட்டு கேட்கிறேன் : முதல் முறை தேர்வாகி அவைக்கு வந்தவர்கள் வாக்காளர்களுக்கு நன்றி சொல்வது வழக்கம். கட்சித் தலைவருக்கு நன்றி சொல்வது வழக்கம். அதிலும் போட்டி போட்டுக் கொண்டு பேசுகிறார்கள். முகஸ்துதிக்கு யார் மயங்குகிறானோ அவன் விளங்க மாட்டான். இவர்களுக்கு யார் தான் எழுதிக் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. பத்திரம் எழுதுபவர்கள் போல எவனோ ஒருவன் எழுதிக் கொடுக்கிறான்.

தயவுசெய்து கையெடுத்து கும்பிடுகிறேன். எம்.எல்ஏக்கள் உங்கள் தலைவரை புகழ்ந்து பேச வேண்டாம். மன்றத்தில் அவையெல்லாம் உகந்ததல்ல. இந்த மன்றத்தின் கண்ணியத்திற்கும் ஏற்புடையதல்ல. என் தலைவன் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. மரியாதை உண்டு. உங்களுக்கும் உண்டு. அதனால்தான் ஆங்காங்கே கட்டுப்பட்டு உட்கார்ந்து இருக்கிறோம். எனவே வர்ணனையை விடுங்கள். முக்கிய பொருளை பேசுங்கள்" என வலியுறுத்தினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications