சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொசஸ்தலை ஆற்றில் ஆந்திரா கட்டும் புதிய அணை? தமிழகத்திற்கு பாதிப்பு வருமா.. விளக்கும் துரைமுருகன்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் மழை நீர் வீணாகாமல் தடுக்க அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், இது குறித்து அமைச்சர் துரைமுருகன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இந்தாண்டு கோடைக் காலம் முடிந்தது முதலே நல்ல மழை பெய்து வருகிறது. மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் சிறப்பாக மழை பெய்து வருகிறது.

அதிலும் கோவை உள்ளிட்ட பல இடங்களில் இயல்பான அளவை காட்டிலும் அதிக மழை நீரே இந்த ஆண்டு பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திராவிடம், தமிழன், தமிழ் தேசியம்.. ஸ்டாலின், அண்ணாமலை, சீமான்.. அனல் பறந்த ட்விட்டர்!திராவிடம், தமிழன், தமிழ் தேசியம்.. ஸ்டாலின், அண்ணாமலை, சீமான்.. அனல் பறந்த ட்விட்டர்!

 வேலூர்

வேலூர்

அதேநேரம் இந்த மழை நீர் வீணாகக் கடலில் சென்று சேர்வதைத் தடுக்க இன்னும் கூடுதலாக அணைகளைக் கட்ட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

 அமைச்சர் துரைமுருகன்

அமைச்சர் துரைமுருகன்

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் வேலூர் எம்பி கதிர் ஆனந்த், அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

 நிகழ்ச்சி

நிகழ்ச்சி

இந்த விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், "தமிழ்நாட்டில் பல்வேறு கிராமங்களில் இருந்தும் மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து படிப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. இதை எல்லாம் திமுக அரசு உணர்ந்தே, மாணவர்களுக்குப் பல நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. இதனால் தான் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்றாலும் கூட விலையில்லா மிதிவண்டிகளை நாங்களும் தொடர்கிறோம்" என்றார்.

கொசஸ்தலை

கொசஸ்தலை

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், "கொசஸ்தலை ஆற்றுக்குக் குறுக்கே ஆந்திரா அணை கட்டுவது எல்லாம் நடக்காத காரியம். இதை விட மாட்டோம். ஆந்திர அரசு கொசஸ்தலையின் குறுக்கே அணை கட்டுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது சிறிய விஷயம் தான். இதை தேவையில்லாமல் பெரிதாக்கத் தேவையில்லை.

 தமிழ்நாட்டில் புதிய அணைகள்

தமிழ்நாட்டில் புதிய அணைகள்

மேட்டூர் உபரி திட்டம் ஏற்கனவே தர்மபுரிக்கு வழங்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் வாய்ப்பு இருந்தால், இது மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிப்போம். தமிழ்நாட்டில் தற்போது உள்ள சூழலில் புதிய அணைகள் எதுவும் கட்ட வாய்ப்பில்லை. இங்கு அதற்கான நீர் வசதியோ அல்லது இட வசதியோ இல்லை" என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

English summary
Minister Duraimurugan says there is no possibility for new dams in tamilnadu: Minister Duraimurugan latest press meet in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X