எடப்பாடி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர.. ஆதரவாக தோள் கொடுத்த ஓபிஎஸ்.. துரைமுருகன் கொடுத்த பதிலடி!
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் பட்டாசு விபத்து பற்றி கேள்வி எழுப்பிய முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில் இன்று இரண்டாவது நாளாக பேரவை இன்று கூடி நடைபெற்று வருகிறது. தமிழக சட்டசபை மழைக்காழ கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் கூட்டத்தில் ஏழு சட்ட மசோதாக்களை அமைச்சர்கள் தாக்கல் செய்ய உள்ளனர். இந்நிலையில் இன்று சட்டசபையில், அரியலூர், ஓசூர், பட்டாசு விபத்துகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசினார். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு ஆதரவாக இந்த விவாதத்தில் பேசினார்.

தீபாவளி நெருங்கும் நிலையில், பட்டாசு விபத்துகளை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரணத்தை ரூ. 10 லட்சமாக உயர்த்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். அவருக்கு ஆதரவாக எழுந்து ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக ஆங்காங்கே பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்துகள் ஏற்பட்டு பலர் பலியாகும் சம்பவங்கள் நிகழ்ந்து வருவது குறித்துப் பேசி, பட்டாசு விபத்துகளை தடுக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வடுகப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட களத்தூர் கிராமத்தில் ஆர்.கே.வி.எம். பட்டாசு ஆலையில் வெடி விபத்து; விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பனையடிபட்டி கிராமத்தில் உள்ள சோலை பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து; தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே துறையூரில் செஞ்சுரி பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில் வெடி விபத்து; சிவகாசி அருகே ஜோதி பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில் வெடி விபத்து; தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த நாகதாசம்பட்டியிலுள்ள பட்டாசு கிடங்கில் வெடி விபத்து; காஞ்சிபுரம் மாவட்டம் அடுத்த குருவிமலை பகுதியில் உள்ள பட்டாசு கிடங்கில் தீ விபத்து, மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடி கிராமத்தில் பட்டாசு விபத்து, ஓசூர் அருகே அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்து அரியலூர் பட்டாசு விபத்து என எண்ணிலடங்கா விபத்துகள் பட்டாசு தொழிற்சாலைகளில் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன என ஓபிஎஸ் தெரிவித்தார்.
மேலும், தீபாவளிப் பண்டிகை வருவதை முன்னிட்டு பட்டாசு தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், கழிவுப் பட்டாசுகளை அகற்றுவது குறித்தும், பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அரசு நடவடிக்கைகளை கவனிக்காத காரணத்தால் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை ஆகிவிட்டன என ஓபிஎஸ் தெரிவித்தார்.
அவருக்கு பதில் அளிக்கும் வகையில், அவை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எழுந்து, "முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியில் இருந்தபோது இதையெல்லாம் நடைமுறைப்படுத்தி இருந்தால் இதுபோன்ற விபத்துகளே இப்போது ஏற்பட்டிருக்காது அல்லவா?" என்றார். துரைமுருகனின் பேச்சை திமுக உறுப்பினர்கள் மேசையை தட்டி வரவேற்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications