Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருத்து சொன்ன கனிமொழி, விஜய்! மறுத்து அறிக்கை விட்ட கீதா ஜீவன்! பெண்களுக்கு தமிழகம்தான் பாதுகாப்பாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ‛‛இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது'' என இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் புள்ளி விபரங்களுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கனிமொழி எம்பி மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் ஆகியோர் தங்களின் எக்ஸ் பக்கத்ததில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

kanimozhi geetha jeevan dmk politics

இதுதொடர்பாக தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் புள்ளிவிபரங்களுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பெண்களுக்கான உரிமைகளை காப்பது போலவே அவர்களது கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் முதல்வர் தலைமையிலான திராவிட மாடல் அரசு உறுதியாக இருக்கிறது. பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும், தங்களுடைய பயணங்ளை மேற்கொள்வதற்கான சூழல் தமிழ்நாட்டில் நிலவுவதால் தான் தமிழ்நாட்டில் பெண்கள் மிக அதிக அளவில் கல்வி கற்கிறவர்களாகவும், வேலைக்கு செல்பவர்களாகவும், சுயமானவர்களாகவும் உள்ளனர். இந்தியாவில் உற்பத்தி துறையில் உள்ள பெண்களில் கிட்டத்தட்ட பாதி பேர் அதாவது 43 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் பணியாற்றுகிறார்கள்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி 1973ம் ஆண்டு பெண்களை முதன் முதலாக காவல்துறையில் இணைத்தார். முதலமைச்சர் முக ஸ்டாலின் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து உட்கோட்டஙகளிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் புதிதாக கவால்நிலையங்களை திறந்து வருகிறார்.

தமிழ்நாட்டில் மொத்தம் 241 அனைத்து மகளிர் கவால் நிலையங்கள், 32 ஆட்கட்தத்ல தடுப்பு பிரிவுகள், 7 புனன் விசாரணை பிரிவுகள், 43 குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவுகள் ம்றம் 39 சிறப்பு இளஞ்சிறார் காவல் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. சிறார்களுக்கு எதிரான குற்றங்களை கையாள்வதற்கு மாநிலத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் 194 சிறார் நட்பு அறைகள் மற்றும் 1,542 குழந்தைகள் நல காவல் அலுவலர்களும் செயல்பட்டு வருகின்றனர்.

மாநில அளவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பொருட்டு தடுப்பு பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு, அப்பிரிவு ஒரு கூடுதல் காவல்துறை இயக்குநர் தலைமையில் இயங்கி வருகிறது. அதேபோல் ‛ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்' திட்டம், ‛இமைகள் திட்டம்' ஆகியவற்றின் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு மற்றும் விரைவான நீதி கிடைக்க அரசு செயலாற்றி வருகிறது.

மேலும் பெண்களுக்கு உதவும் வகையில் அவர்கள் விரைவாக தங்களது புகார்களை பதிவு செய்ய ‛காவல் உதவி' செயலி முதலமைச்சரால் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. அதேபோல் பெண்கள் உதவி மைய எண் 181, மற்றும் குழந்தைகளுக்கான உதவி மைய எண் 1098 ஆகியவை மிகச்சிறப்பாக செயல்பாட்டில் உள்ளன. இவற்றின் மூலமும் பதிவு செய்யப்படும் குற்றங்கள் உடனடியாக விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமூக நலத்துறை, பள்ளி கல்வித்துறை, காவல்துறை ஆகிய மூன்று துறைகளும் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இறுதியாக 202ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை நாடு முழுமைக்கும் லட்சத்துக்கு 65 என்ற அளவிலும், தமிழ்நாட்டில் 24 என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாலியல் வன்புணர்வு வழக்குகளின் தேசிய சராசரி 4.6 என்ற அளவிலும் தமிழ்நாட்டிலும் 0.7 அளவிலும் உள்ளது.

பெண்களின் சமூக வாழ்வை உயர்த்துவதற்கான ‛விடியல் பயணம், ‛கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' போன்ற நாட்டிற்கே முன்னோடியான திட்டங்களை செயல்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களை தடுப்பதை அரசின் முக்கிய நோக்கமாக கொண்டு செயலாற்றுகிறது திராவிட மாடல் அரசு. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான எத்தகைய வன்முறையையும் இநு்து அரசு சகித்து கொள்ளாது. மிகுந்த கண்காணிப்புடன் உறுதியான நடவடிக்கைகை எப்போதும் எடுத்து வருகிறது. அதனால் தான் இந்தியாவிலேயே பெண்பகளுக்கு பாதுகாப்பு இருக்கும் மாநிலங்கிளல் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று கனிமொழி எம்பி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால், ஒருபோதும் விடுதலை அடைய முடியாது. ஆண்களுக்கு நிகராய் சமூக அடுக்கின் அத்தனை படிநிலைகளையும் தனது அறிவால், உழைப்பால் கட்டிமைத்தவர்கள் பெண்கள். ஆனால், வீடு தொடங்கி வீதி வரை சமூகத்தின் எல்லா தளங்களிலும் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வண்ணமே உள்ளது. பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினமான இன்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தெிரான வன்முறைகளை தடுப்போம் என்றும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளை அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியேற்போம்'' என்று தெரிவித்து இருந்தார்.

அதேபோல் நடிகர் விஜய் ‛‛சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருந்தலும், அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது. பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண்க குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்ன. பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதகிரித்து வருவதை தடுக்க, நீதித்துறையின் துணையோடு ட்சியாளர்கள் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரா பாலியல் குற்றங்கள் தொபர்ான புகார்களுக்கு, அரசு தனி இணையதளத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு யோசனை தெரிவித்துள்ளது. இதற்கு மதிப்பளித்து, தமிழக அருசு தனி இணையதளத்தை உருவாக்கி பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் வலியுறுத்துகிறேன்'' என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+