தீபாவளிக்கு பிறகு மகளிர் சுய உதவிக் குழுக்கான கடன் தள்ளுபடி.. அமைச்சர் அறிவித்த ஹேப்பி நியூஸ்
சென்னை: அடுத்த ஒரு வார காலத்திற்குள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன்கள் தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.
ராயபுரத்தில் கூட்டுறவு வங்கியின் புதிய கிளையை திறந்து வைத்து இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், மிக நெருக்கடியான இந்த பகுதியில் கூட்டுறவு வறங்கி அமைக்கப்பட்டிருப்பது இந்த வட்டாரத்தில் இருக்கக் கூடிய மகளிருக்கு பல வகையில் பயன் அளிக்கும்.
சுய உதவிக் குழு கடனை ரத்து செய்வது தொடர்பாக கணக்கிடும் பணிகள் நடந்து வருகிறது. தீபாவளி பண்டிகை முடிவுடன் அதற்கான பணிகள் தொடங்கப்படும்.

முதல்வர்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் சார்ந்த திட்டங்களுக்கே அதிக முன்னுரிமை தருகிறார். சுய உதவிகுழு கடன் மட்டுமல்லாமல் பெண்கள் எந்த கடன் கேட்டாலும் அதை கொடுக்குமாறு மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பெண்களுக்கு கடன்
மத்திய கூட்டுறவு வங்கியும் பெண்களுக்கு கடன் கொடுக்க தயாராகத்தான் உள்ளது என்றார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ பெரியசாமி கூறுகையில், தமிழக முதல்வராக ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றவுடன் ரூ 2750 கோடி மகளிர் சுய உதவிக் கடனைத் தள்ளுபடி செய்து பல லட்சம் பெண்கள் பயனடையும் வகையில் நடவடிக்கைகளை எடுத்தார்.

ஆய்வு
சுய உதவி குழு கடன்களுக்கான வசதிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் அதற்கான பணிகள் முடிக்கப்பட்டு, எப்படி நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதோ அது போல் சுய உதவி குழுக்களின் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான ரசீதுகள் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நகைக் கடன்
மொத்தத்தில் 99.5 சதவீதம் பேருக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தகுதியானவராக யார் இருந்தாலும் அரசின் நலத்திட்டங்களையும் அதன் பயன்களையும் பெற்றுக் கொள்ளலாாம் என தெரிவித்தார். மாநில அரசின் திட்டங்களை எல்லாம் மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறார்களே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு மாநில அரசு வெளிப்படையாக செயல்பட்டு கொண்டிருக்கும் போது யார் வேண்டுமானாலும் எங்கள் திட்டங்களை ஆய்வு செய்து கொள்ளலாம் என்றார்.
-
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு












Click it and Unblock the Notifications