அதெப்படி அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தலாம்? அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
சென்னை : கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத சசிகலா எப்படி அதிமுக கட்சி கொடியை பயன்படுத்தலாம் என ட்விட்டரில் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் ஜனவரி 27 ம் தேதி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டாலும் அவர் தொடர்ந்து மருத்துவமனையிலேயே இருந்து வந்தார்.

இந்நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து, சசிகலாவின் உடல்நிலை சீரானதால் அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருப்பினும் அவர் சென்னை வராமல் சில நாட்கள் பெங்களூருவில் உள்ள வீட்டில் தங்கி இருப்பார் என கூறப்பட்டது. இதன்படி இன்று டிஸ்சார்ஜ் ஆனதும் காரில், மருத்துவமனையில் இருந்து சசிகலா புறப்பட்டு சென்றார்.
அப்போது அவர் சென்ற காரில் அதிமுக கட்சிக் கொடி பொருத்தப்பட்டிருந்தது. சசிகலா மீண்டும் கட்சியில் சேர்க்ப்பட வாய்ப்பில்லை என அதிமுக நிர்வாகிகள் கூறும் வந்தாலும், சசிகலாவை வரவேற்க தமிழகத்தின் பல பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய அதே காரில், அதிமுக கொடியை பறக்க விட்டபடி சசிகலா சென்றுள்ளது அதிமுக.,வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் அதிமுக.,வின் ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்ட அமைச்சர் ஜெயக்குமார், அஇஅதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாத சசிகலா எப்படி கட்சிக் கொடியை பயன்படுத்த முடியும்; இது சட்டத்திற்குப் புறம்பானது என குறிப்பிட்டுள்ளார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications