அம்மிக்கல்லோடு அம்மா ஆட்சியும் பறந்துவிடும்.. எப்போதும் மம்மி ஆட்சிதான்.. பேரவையில் "ரைமிங்" விவாதம்
சென்னை: ஆடிக்காற்றில் அம்மிக்கல்லோடு அம்மா ஆட்சியும் பறந்துவிடும் என பூங்கோதை ஆலடி அருணா கூற, அதற்கு எப்போதும் எங்கள் மம்மி ஆட்சிதான் தொடரும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. எப்போதும் பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுவது வழக்கம். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்ததால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

இதனால் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 1-ஆம் தேதி முதல் சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கியது. இந்த நிலையில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை ஒவ்வொரு துறை மீது மானிய கோரிக்கை குறித்த விவாதம் நடந்து வருகிறது.
அதுபோல் இன்றும் சட்டசபை கூடியது. அப்போது திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா பேசுகையில் நீட் தேர்வால் சமூக நீதி மறுக்கப்பட்டுள்ளது. தனியார் பயிற்சி மையங்கள் பணம் சம்பாதிக்க கொண்டு வரப்பட்ட தேர்வு.
ஆடிக்காற்றில் அம்மிக்கல்லோடு சேர்ந்து அம்மா ஆட்சியும் பறந்து போய்விடும் என்றார் பூங்கோதை. அப்போது அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில் பழைய பழமொழிகள் இக்காலத்திற்கு பொருந்தவே பொருந்தாது. எப்போதும் எங்கள் மம்மி ஆட்சிதான் தொடரும் என ஜெயக்குமார் பதிலடி கொடுத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications