நிறுத்திக்கங்க.. எல்லாத்தையும் நிறுத்திக்கங்க.. துக்ளக் குருமூர்த்திக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை!
சென்னை: அதிமுகவை விமர்சனம் செய்வதை துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் ஒரே எம்பியான ஓபி ரவீந்திராநாத் குமாருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என கூறப்பட்டது. அதேபோல் அதிமுகவின் ராஜ்யசபா எம்பியான வைத்தியலிங்கத்திற்கும் எம்பி பதவி கொடுக்கப்படலாம் என கூறப்பட்டது.
மத்திய அமைச்சரவையில் இருவரின் பெயர்களும் அடிபட்ட நிலையில் இருவருக்குமே அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கிய பாஜக அதிமுகவுக்கு மட்டும் அமைச்சர் பதவி வழங்கவில்லை.

ஏதாச்சு மீந்துச்சுன்னா
மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் கொடுக்கப்படாதது குறித்து துக்ளக் வார இதழ் கார்ட்டூன் வெளியிட்டிருந்தது. அதில் கடைசியா ஏதாச்சு மீந்துச்சுன்னா குடுப்பாங்க.. அப்ப சாப்பிடலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதிமுக அவமதிப்பு
துக்ளக் இதழின் இந்த கார்ட்டூன் அதிமுகவினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதிமுகவை அவமதிக்கும் வகையில் துக்ளக்கின் கார்ட்டூன் இருந்தது.

குருமூர்த்திக்கு எச்சரிக்கை
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் துக்களக் ஆசிரியர் குருமூர்த்திக்கு எச்சரிக்கை விடுத்தார். துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அதிமுகவை விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

குருமூர்த்தி தாங்கமாட்டார்
நாங்கள் விமர்சித்தால் குருமூர்த்தி தாங்கமாட்டார். துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஏன் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறார் என தெரியவில்லை. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அமைச்சர் கண்டனம்
ஏற்கனவே அதிமுக தலைவர்களை ஆண்மையில்லாதவர்கள் என குருமூர்த்தி ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் அதிமுக தலைவர்களை விமர்சித்திருப்பதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கந்தல் துணிதான் காற்றில் ஆடும்
பட்டுத்துணி பெட்டிக்குள்தான் இருக்கும். கந்தல் துணி தான் காற்றில் ஆடும், நிறை குளம் தலும்பாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் துக்ளக் குருமூர்த்தியை விமர்சித்தார். மேலும் குருமூர்த்தி அடக்கி வாசிப்பது அவருக்கு நல்லது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அமைச்சர் கண்டனம்
ஏற்கனவே அதிமுக தலைவர்களை ஆண்மையில்லாதவர்கள் என குருமூர்த்தி ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் அதிமுக தலைவர்களை விமர்சித்திருப்பதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications