எப்போ வரது சார் கலெக்டரு? சட்டென போனை போட்டு.. கடிந்து கொண்ட கே.என்.நேரு.. அடுத்து நடந்த ட்விஸ்ட்
சென்னை: திருநெல்வேலி ஆட்சியர் ஆய்வுக்கு வராததை கடிந்து கொள்ளும் விதமாக அமைச்சர் கே.என் நேரு பேசியது கவனம் பெற்றுள்ளது. போனை போட்டு அமைச்சர் கே. என் நேரு பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் உலகில் பரவிய வதந்திகள் உண்மை என்று நிரூபிக்கும் வகையில், திருநெல்வேலி மேயர் பி.எம்.சரவணன் மற்றும் கோயம்புத்தூர் மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதங்களை அந்தந்த மாநகராட்சி ஆணையர்களிடம் புதன்கிழமை அளித்தனர். இரு தலைவர்களும் தமிழக ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள்.

நெல்லை மேயர்: திருநெல்வேலியில், 2022ல், கவுன்சிலர்கள் பொறுப்பேற்றதில் இருந்தே, உள்ளாட்சிக்குள் உட்கட்சி பூசல் உச்சத்தில் உள்ளது. மேயர் சரவணன், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாமல் முட்டுக்கட்டை போடுவதாக, தி.மு.க.,வினர் மீது, பல புகார்கள் குவிந்தன
2023 டிசம்பரில் திமுக கவுன்சிலர்கள் தங்கள் சொந்த மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஒரு நாள் முன்னதாகவே, தி.மு.க., கவுன்சிலர்களை சிலர் அருகில் உள்ள ஓட்டல்களுக்கு கூட்டிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், கடந்த ஜனவரி 12ம் தேதி எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் தீர்மானத்தை புறக்கணித்ததால் அது தோல்வியடைந்தது.
ஆனால், மேயர் மீது தி.மு.க., கவுன்சிலர்கள் மத்தியில் கடும் கோபமும், விரக்தியும் நிலவியது. தற்செயலாக மார்ச் 2024 இல், திருநெல்வேலி வார்டு 7 கவுன்சிலர் எம் இந்திரா, மேயர் சரவணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை எதிர்த்து, வார்டில் எந்த வளர்ச்சிப் பணிகளையும் செய்ய அனுமதிக்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாநகராட்சி ஆணையர் சுபம் ஞானதேவர் தாகரேவிடம் ராஜினாமா செய்தார். திருநெல்வேலியில் 2022 தேர்தலில் மொத்தமுள்ள 55 இடங்களில் 44 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. இப்போது நெல்லை மேயர் ராஜினாமா செய்துள்ளார்.
புதிய மேயர் அறிவிப்பு: திருநெல்வேலி மாநகராட்சியில் திமுகவைச் சேர்ந்த சரவணன் மேயராக இருந்து வந்த நிலையில் அவர் ராஜினாமா செய்ததால் புதிய மேயர் நாளை (ஆகஸ்ட் 5) தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். திமுக சார்பில் மேயர் வேட்பாளரை தேர்வு செய்ய இன்று அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் ஆலோசனை நடத்தி, நெல்லை மேயர் பதவிக்கு திமுக சார்பாக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவித்துள்ளனர்.
இதற்காக அமைச்சர் கே. என் நேரு நெல்லை சென்று இருந்தார். அப்போது நெல்லையில் இவர்கள் ஆய்வு பணிகளையும் மேற்கொண்டனர். அந்த நேரத்தில் அமைச்சர்கள் ஆய்வு செய்யும் இடத்திற்கு சென்றும் கூட.. ஆட்சியர் அந்த இடத்திற்கு வரவில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு உடனே வராததை கடிந்து கொள்ளும் விதமாக அமைச்சர் கே. என் நேரு அவருக்கு போன் செய்தார்.
திருநெல்வேலி ஆட்சியர் ஆய்வுக்கு வராததை கடிந்து கொள்ளும் விதமாக அமைச்சர் கே.என் நேரு பேசியது கவனம் பெற்றுள்ளது. போனை போட்டு அமைச்சர் கே. என் நேரு.. என்ன கலெக்டர்.. ஏன் இன்னும் வரவில்லை.. ஆய்வு பணிக்கு வர மாட்டீர்களா என்று கேட்டார்.
இதையடுத்து ஆட்சியர் சொன்ன பதிலை ஏற்றுக்கொண்ட அமைச்சர் நேரு.. சரி சரி அப்போ வாருங்கள் என்று கூறினார்.. கே என் நேரு ஆட்சியரிடம் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications