அமைச்சர் பொறுப்பேற்று வருஷம் 2ஆகப் போகுது! சட்டசபையில் தடுமாற்றத்துடன் பேசிய கயல்விழி செல்வராஜ்!
சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பதிலளித்து பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மிகுந்த தடுமாற்றத்துடன் பேசியதை கண்ட சபாநாயகர் அப்பாவு சில பாயிண்ட்களை எடுத்துக் கொடுத்தார்.
அமைச்சர் பொறுப்பேற்ற 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் இன்னும் தனது பேச்சுத்திறமையை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வளர்த்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கயல்விழி செல்வராஜை பொறுத்தவரை ஆசிரியையாக இருந்து அமைச்சராகியவர் என்பது கவனிக்கத்தக்கது.

சட்டசபை கூட்டத் தொடர்
தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் 4ஆம் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கேள்வி நேரத்தின் போது பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர் தொகுதி சதுரங்கபட்டினம் ஊராட்சியில் உள்ள இருளர் பகுதிக்கு சமுதாய கூடம் அமைக்க அரசு முன்வருமா என வினவினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ், அதிகாரிகள் எழுதிக் கொடுத்த பதிலை கூறிவிட்டு அமர்ந்தார்.

2 துணைக் கேள்விகள்
ஆனால் அதன் பிறகு விசிக எம்.எல்.ஏ.எஸ்.எஸ்.பாலாஜி எழுப்பிய 2 துணைக் கேள்விகளால் திக்குமுக்காடி போய்விட்டார் அமைச்சர் கயல்விழி செல்வராஜ். குறிப்பாக ரூ.925 கோடி திருப்பி அனுப்பப்பட்டது தொடர்பாக எஸ்.எஸ்.பாலாஜி பேசியதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சொல்ல வந்த விஷயத்தை புரிய வைக்க முடியாமல் தடுமாறினார். உடனே இதைக் கவனித்த சபாநாயகர் அப்பாவு, நீங்க அமைச்சரான பிறகு நிதி திருப்பி அனுப்பப்படவில்லை அது தானே என்றார்.

சபை நிகழ்வுகள்
ஆம், அதிமுக ஆட்சியில் தான் நிதி திருப்பி அனுப்பப்பட்டது என ஒரு வழியாக பைனல் பதிலுக்கு வந்தார் அமைச்சர் கயல்விழி செல்வராஜ். முதலமைச்சர் ஸ்டாலின் அவையில் இருந்தபோதே அவர் இவ்வாறு தடுமாற்றத்துடன் தயங்கி தயங்கி பேசியது குறிப்பிடத்தக்கது. அமைச்சர்களை பொறுத்தவரை துறை ரீதியான நடவடிக்கைகளை முழுமையாக அறிந்துகொண்டு தான் சட்டசபைக்கு வர வேண்டும் என்பது முதல்வர் கொடுத்துள்ள அறிவுறுத்தலாகும்.

பேச்சுத்திறமை
அமைச்சராகி 2 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையிலும் கயல்விழி செல்வராஜ் இன்னும் தனது பேச்சுத் திறமையை வளர்த்துக் கொள்ளவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதனிடையே கயல்விழி செல்வராஜை பொறுத்தவரை ஆசிரியையாக இருந்து அமைச்சராகியவர் என்பது கவனிக்கத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications