அவரவர் சவுகரியத்துக்கு யூகிக்காதீங்க! நாங்க எப்ப அப்படிச் சொன்னோம்! ட்விஸ்ட் வைத்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்
சென்னை: மாவட்டங்கள் பிரிக்கப்படும் என எப்போது நாங்கள் சொன்னோம் என்றும் புதிய மாவட்டங்கள் தொடர்பான கோரிக்கை பரிசீலனையில் இருப்பதாக தான் கூறினேன் எனவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மாவட்டங்கள் பிரிக்கப்படும் என்று இன்னும் அறிவிக்காத போதே, இதை அதோடு இணையுங்கள், அதை இதோடு இணையுங்கள் என்று கூறுவது ஏற்கத்தக்கதல்ல என பதிலளித்தார்.

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் 11வது நாள் கூட்டம் விறுவிறுப்பாக இன்று நடைபெற்றது. கேள்வி நேரத்தின் போது பேசிய மடத்துக்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன், பழனியை புதிய மாவட்டமாக உருவாக்கினால் அதில் மடத்துக்குளம், உடுமலை தொகுதிகளை சேர்க்கக் கூடாது எனக் கோரிக்கை விடுத்தார்.
கடந்த 2 நாட்களாக தனது முகாம் அலுவலகத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து மடத்துக்குளம் தொகுதியை புதிதாக உருவாக்கப்படும் பழனியுடன் சேர்க்கக் கூடாது என கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார்.
பழனியை புதிய மாவட்டமாக உருவாக்குவதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது என்றும் ஆனால் மடத்துக்குளம், உடுமலைப் பேட்டை பகுதிகளை பழனியில் இணைத்துவிடக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுமா என்ற கேள்வியை முன்வைத்தார். இதற்கு பதிலளித்து பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மாவட்டங்கள் பிரிக்கப்படும் என எப்போதும் நாங்கள் சொன்னோம் என ட்விஸ்ட் வைத்தார்.
சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோரின் கோரிக்கைக்கு ஏற்ப புதிய மாவட்டங்களை பிரிப்பது தொடர்பான கருத்துரு அரசின் கவனத்தில் இருப்பதாக மட்டுமே சொன்னதாகவும் பிரிக்கப்படும் எனக் கூறவில்லை எனவும் தெரிவித்தார்.
நிலைமை இப்படியிருக்க அவரவர் சவுகரியத்துக்கு யூகித்து பத்திரிகைகள், யூடியூப்களில் பார்த்துவிட்டு பேசுவது சரியல்ல என்றும், மாவட்டங்களை பிரிக்கின்ற போது முதல்வர் ஸ்டாலின் நிச்சயம் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கலந்து பேசி ஆலோசனைகளை பெற்று முடிவெடுப்பார் எனக் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications