சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலினின் "வலதுகரத்தை" சீண்டி.. தர்மசங்கடப்படுத்த முயற்சி.. பொளேர் பதிலை சொல்லி ஆப் செய்த அமைச்சர்!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் வேகம் காட்டி வருகிறார் மா சுப்பிரமணியம்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பரபரப்புக்கு நடுவில், ஸ்டாலினின் வலதுகரம் குறித்து தேவையில்லாத செய்திகளை பரப்ப ஒரு குரூப் முயன்றுள்ளது... ஆனால், ஒரே வார்த்தை சொல்லி அத்தனை பேரையும் ஆப் செய்துவிட்டாராம் அந்த அமைச்சர்!

இந்த முறை கொரோனாவை ஒழிப்பதே திமுகவின் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.. அதனால்தான், பதவியேற்புக்கு முன்பேயே, கொரோனா பிரச்சனை குறித்து அதிகாரிகளிடம் ஸ்டாலின் ஆலோசித்து வந்தார்.

பதவியேற்றதும், ஒருங்கிணைந்து தொற்றை ஒழிப்போம் என்றும் தெரிவித்தார்.. அதனால்தான், அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் என்றில்லாமல், அமைச்சர்கள், எம்பிக்கள், நிர்வாகிகள், அதிகாரிகள் என மொத்த பேரும் களத்தில் இறங்கி உள்ளனர். இவர்களுடன் கூட்டணி கட்சிகளும் கரம் கோர்த்துள்ளன.

 பட்டியல்

பட்டியல்

எனினும், அமைச்சரவை பட்டியலை தயார் செய்யும்போதே, சுகாதாரத்துறை அமைச்சராக மா.சுப்பிரமணியன்தான் என்பது முடிவாகி உள்ளது.. திமுகவில் தவிர்க்க முடியாத மூத்த தலைவர் இவர்.. ஸ்டாலினுக்கு ரொம்பவே நெருக்கம்.. இப்போதுள்ள கடினமான நிலைமையை சமாளிக்கக் கூடிய செயல் வீரர் என்பதால்தான் இந்த பதவி அவருக்கு தேடி தரப்பட்டது..

 சுறுசுறுப்பு

சுறுசுறுப்பு

எல்லாவற்றிற்கும் மேலாக, மா.சு. சுறுசுறுப்பானவர், விரட்டி வேலை வாங்குபவர்.. கறார் பேர்வழி.. யாருக்காகவும் காம்ப்ரமைஸ் தன்னை செய்து கொள்ளாதவர்.. அதேசமயம், தட்டிக் கொடுத்து அனைவரையும் ஊக்குவிப்பவர்... தான் ஓடி மற்றவர்களையும் வேகமாக செயல்பட வைப்பவர்.. யார் போன் செய்தாலும் டக்கென போன் எடுத்து பேசுபவரும்கூட..!

கேள்வி

கேள்வி

ஆனால், பொறுப்பேற்றதில் இருந்து, அமைச்சர் போன் எடுப்பதில்லையாம்.. எப்போது யார் போன் செய்தாலும் அவரது பி.ஏ.தான் போன் எடுக்கிறாராம்.. பதவிக்கு வந்ததும் மாற்றமா? என்று இதைதான் சிலர் திரித்து ஆரம்பித்தனர்.. ஒரு பத்திரிகையாளர் நேரடியாகவே கேட்டுவிட்டாராம்.. உங்களுக்கு ரொம்ப நல்ல பேர் இருக்கு.. ஏன் இப்படி கெடுத்துக்கறீங்க? என்று மா.சுவை கேட்டாராம்..

முக்கியம்

முக்கியம்

அதற்கு அமைச்சரோ, "தமிழகம் எப்பேர்ப்பட்ட பிரச்சனையில் சிக்கி இருக்கு? கொரோனா தடுப்பு பணி சம்பந்தமான மீட்டிங், ஆய்வு என்று களப்பணிகளில் இறங்கி இருக்கின்றன.. அதனால்தான் போன் எடுக்க முடியறது இல்லை.. நல்ல பேர் வாங்குறதைவிட, நாலு பேர் உயிரைக் காப்பாத்துறதுதான் முக்கியம்ன்னு நினைக்கிறேன்" என்று நச்செனெ பதில் சொன்னாராம் மா.சு.!

English summary
Minister Ma Subramani is actively implementing corona prevention measures
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X