மருத்துவர் பாலாஜி நலமாக இருக்கிறார்.. போலி காரணத்தை சொல்லி தாக்குதல் நடந்துள்ளது: மா.சுப்பிரமணியன்
சென்னை: மருத்துவர் பாலாஜி நலமுடன் உள்ளார் என்றும் சிகிச்சை பெற்று வரும் அவருடன் வீடியோ காலில் பேசினேன் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவத்தில் குறைபாடு என்ற போலியான காரணத்தைக் கூறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் தாய் பிரேமாவிற்கு நுரையீரல் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் கடந்தாண்டு மே முதல் நவம்பர் மாதம் வரை, சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் நிபுணர் மருத்துவர் பாலாஜியிடம் சிகிச்சை பெற்றுள்ளனர்.

ஆனால், சிகிச்சையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படாத நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சவிதா என்ற தனியார் மருத்துவமனையில் 3 மாத சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை, வெளிநோயாளி பிரிவில் மருத்துவரை சந்திக்க 4 பேருடன் விக்னேஷ் மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது, புற்றுநோய் சிகிச்சை பிரிவில் இருந்த மருத்துவர் பாலாஜியிடம் சுமார் அரை மணிநேரம் விக்னேஷ் பேசியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில், தான் கொண்டு சென்ற கத்தியால், மருத்துவர் பாலாஜியின் இடது கழுத்தில் 2 முறை குத்தியுள்ளார். இதில், மருத்துவர் பாலாஜிக்கு ரத்தம் கொட்டியது. படுகாயம் அடைந்த மருத்துவர் பாலாஜி, உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வெளியேற முயன்ற விக்னேஷை, பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
சென்னை கிண்டி மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி மீது கத்திக்குத்து சம்பவம் நடந்த நிலையில், அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தனர். மருத்துவர் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து விவகாரத்தைக் கண்டித்தும் பணியில் உள்ள மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறியும், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். மருத்துவ சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற்றதாக அமைச்சர் தெரிவித்தார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் பாலாஜி தற்போது நலமுடன் உள்ளார். மருத்துவர் பாலாஜியுடன் வீடியோ காலில் பேசினேன் மருத்துவ சிகிச்சையில் குறைபாடு எனக் கூறி மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மருத்துவ சங்கங்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மருத்துவப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் போராட்டத்தை திரும்பப் பெற்றனர். பேச்சுவார்த்தை முடிந்து மருத்துவர்கள் நிறைவுடன் சென்றனர். மருத்துவர்கள் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும். மருத்துவர்களின் பாதுகாப்பை அதிகரிக்க மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மருத்துவ சங்கங்கள் கூறிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கிண்டி மருத்துவமனை வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும். அரசு மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். வட்டார மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.
அரசு மருத்துவர்கள் விரோதப்போக்குடன் யாருக்கும் மருத்துவம் பார்க்க மாட்டார்கள். மருத்துவத்தில் குறைபாடு உள்ளதாக போலியான காரணத்தைக் கூறி தாக்குதல் நடத்துவது ஏற்புடையதல்ல. தாக்குதலுக்குள்ளான மருத்துவர் பாலாஜி நலமுடன் உள்ளார். சிகிச்சை முடிந்ததும் அவரிடம் முறையாக விசாரணை நடத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications