திடீரென இடுகாட்டுக்கு சென்ற மா.சுப்பிரமணியன்! என்னங்க இப்படி இருக்கு! அதிகாரிகளுக்கு அங்கேயே ரெய்டு!
சென்னை : சென்னையில் அடையாறு பகுதியில் மாநகராட்சிக்கு உட்பட்ட அருளை அம்மன் பேட்டை இடுகாட்டில் தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டதோடு, சேதமடைந்த தகன மேடையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை கிண்டி அடையாறு மாநகராட்சிக்கு உட்பட்ட அருளை அம்மன் பேட்டையில் உள்ள இடுகாட்டில் தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது இடுகாட்டில் சேதம் அடைந்த நிலையில் எரிவாயு தகன மேடை இருப்பதை கண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதை விரைவாக சரிசெய்யுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் இடுகாட்டில் உள்ள குறைபாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் எரிவாயு தகன மேடை மற்றும் அதன் கட்டமைப்புகளை விரைவாக சீரமைத்து, உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அலுவலர்களை அறிவுறுத்தினார். மேலும் அலட்சியமாக செயல்பட்டதாக அங்கிருந்தவர்கள் முன்னேயே கடுமையான எச்சரிக்கை விடுத்த அமைச்சர், இனிமேல் இப்படி இருக்கக் கூடாது என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, இடுகாட்டில் பணியிலிருந்த தூய்மை பணியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். மேலும், தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவற்றை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.


Click it and Unblock the Notifications
