கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்! தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கக் கூடாது -அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை : தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா மரணமடைந்த விவகாரத்தில், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும், வேறு விதமாக விஷயங்களை கிளறி விட்டு அரசியல் செய்வது தலைவர்களுக்கு நல்லதல்ல என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video
சென்னை அருகே வியாசர்பாடி சேர்ந்த கால்பந்து வீராங்கனையான பிரியா, கடந்த சில நாட்களாக கடுமையான மூட்டு வலியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதித்த நிலையில் அவரது வலது கால் மூட்டில் ஜவ்வு விலகி இருப்பதாக கூறியதோடு மூட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனால் அவரது காலில் ரத்த நாளம் பாதிக்கப்பட்டது.

கால்பந்து வீராங்கனை
இதை அடுத்து உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனக் கூறி கால்பந்து வீராங்கனையான அவரது வலது கால் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்டதாக உறவினர்கள் கூறிவந்த நிலையில் இன்று காலை பிரியா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் பிரியாவின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடும் கண்டனம்
இந்த சம்பவத்திற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளதோடு, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக மேலும் பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் பிரியா மரணம் தொடர்பாக வேறு விதமாக விஷயங்களை கிளறி விட்டு அரசியல் செய்வது தலைவர்களுக்கு நல்லதல்ல என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மா.சுப்பிரமணியன்
இது தொடர்பாக பேசியுள்ள அவர்," கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சையில் இருந்த போது உயிரிழந்துள்ளது மிக மிக துயரமான சம்பவம். இதனை அரசியல் ஆக்க கூடாது. அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட ரத்த நாள பாதிப்பால் இதயம் சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளுக்கு செல்லும் ரத்தம் பாதிக்கப்பட்டு அவர் உயர்ந்திருக்கிறார்.

தூண்டிவிட்டு வேடிக்கை
மாணவி மரணம் குறித்த தகவல் அறிந்த உடனடியாக நிவாரணமாக 10 லட்சம் வழங்க வேண்டும் எனவும் அந்த வீராங்கனைக்கு அண்ணன் தம்பி என மூன்று பேர் இருக்கின்றனர். அவர்களில் ஒருவருக்கு அரசு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது/ இந்த விவகாரத்தை அரசியலாக பார்க்கக் கூடாது. கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதற்கு இது சரியான விஷயம் அல்ல. கூடுதலாக ஏதாவது பண்ணி வேறு விதமாக விஷயங்களை கிளறிவிட்டு அரசியல் செய்வதும் அரசியல் தலைவர்களுக்கு நல்லதல்ல" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications