சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓமிக்ரான் 3ஆம் அலை.. தமிழகத்தில் இப்போது என்ன நிலை? பளிச் என விளக்கிய அமைச்சர் மா.சு! முக்கிய தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Recommended Video

    NeoCov எப்படிப்பட்டது? | Data Analyst Vijayanand | Oneindia Tamil

    தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் ஓமிக்ரான் பரவல் ஏற்பட்டது. இதனால் மாநிலத்தில் கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டது. வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்ததால், நிலைமையைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

    இப்போது வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் சூழலில் வேக்சின் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நடைபெற்று வரும் வேக்சின் பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

     அடடே!! மாரிதாசுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகிறாரா சுப்பிரமணியன் சுவாமி? அவரே சொன்ன பதிலை பாருங்க அடடே!! மாரிதாசுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகிறாரா சுப்பிரமணியன் சுவாமி? அவரே சொன்ன பதிலை பாருங்க

     மெகா தடுப்பூசி முகாம்

    மெகா தடுப்பூசி முகாம்

    அப்போது சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை 21 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 9 கோடியே 75 லட்சத்திற்கும் அதிகமானோர் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

     வேக்சின்

    வேக்சின்


    முதல் தவணை 90.94% பேரும், இரண்டாம் தவணை 70.46% பேர் செலுத்தப்பட்டு உள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை பூஸ்டர் தடுப்பூசி 5 லட்சத்து 52 ஆயிரம் பேருக்குப் போடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 100% தடுப்பூசி என்கிற நிலையை, 12 ஆயிரம் ஊராட்சிகளில் 2,792 ஊராட்சிகளும், 24 நகராட்சிகளும் எட்டியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அடுத்த வாரம் சனிக்கிழமை நடைபெற உள்ளதால், மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படாது.

     இழப்பீடு தொகை

    இழப்பீடு தொகை


    கொரோனாவினால் உயிரிழந்த மருத்துவர்களுக்கான இழப்பீடு தொகை 25 லட்சம் ரூபாய் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு 50 லட்சம் ரூபாய் வழங்கிய சுகாதார பணியாளர்கள் குடும்பத்தினருக்கு மாநில அரசின் நிதியுதவி வழங்க வேண்டாம் என மத்திய அரசு வழிமுறைகள் வகுத்துள்ளது. அதன்படி, இதுவரையில் விண்ணப்பித்த நபர்களில் 15 விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளது.

     3ஆம் அலை ஓவர்

    3ஆம் அலை ஓவர்

    அதுமட்டுமின்றி ஓமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி, தற்போது விரைவாகக் குறைந்து வரும் சூழ்நிலையில், மூன்றாம் அலை முடிவுக்கு வந்துள்ளதாகவே கருதுகிறோம்" என்று அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் கடந்த ஜன. 22ஆம் தேதி தினசரி வைரஸ் பாதிப்பு 30,700ஐ தாண்டிய நிலையில், நேற்று அது 2812ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல நேற்று 17 பேர் மட்டும் மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர்.

    தளர்வுகள்

    தளர்வுகள்

    தமிழ்நாட்டில் வைரஸி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் மார்ச் 2 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 16 ஆம் தேதி முதல் நர்சரி, மழலையர், விளையாட்டுப் பள்ளிகளைத் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல வரும் 16 ஆம் தேதி முதல் சினிமா தியேட்டர், உணவகங்களில் 100 சதவீத வாடிக்கையாளர்களுக்குத் தமிழக அரசு அறிவித்தது.

    English summary
    Minister Ma subramanian about Corona vaccination in tamilnadu: when Corona third wave will end in tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X