தமிழகத்தில் ஓமைக்ரான் தொற்று அதிகம்.. என்ன செய்யலாம்.. எச்சரிக்கும் அமைச்சர் மா சுப்பிரமணியன்
தமிழகத்தில் ஓமைக்ரான் கொரோனா தொற்று அதிகம் பரவுவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
சென்னை: கொரோனா அதிகரித்தாலும் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கிறது; மக்கள் பதற்றப்பட தேவையில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திய பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், மராட்டியம், குஜராத், கேரளா, கர்நாடகாவில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் 2 மாதம் முன்பு தினசரி தொற்று 2 என்ற எண்ணிக்கையில் இருந்தது.

ஓமைக்ரான்
உருமாறிய ஓமைக்ரான் வகை கொரோனா தற்போது பரவி வருகிறது. புதிய வகை கொரோனாவால் பெரியளவில் பாதிப்பு இல்லை. வெளிநாடுகளில் இருந்து வருவோரால் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வருவோரிடம் பரிசோதனை செய்யப்படுகிறது என்றார்.

76 ஆக உயர்வு
கொரோனா அதிகரித்தாலும் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கிறது; மக்கள் பதற்றப்பட தேவையில்லை. தமிழ்நாட்டில் ஒருநாளில் 2 என்ற அளவில் இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை 76-ஆக அதிகரித்துள்ளது. H3N2 காய்ச்சல் பாதிப்புக்கு தமிழ்நாட்டில் 15 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

35 ஆயிரம் பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை
வாரந்தோறும் 35 ஆயிரம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து வருவதாக அமைச்சர் தகவல் தெரிவித்தார். 2 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிஜனை சேமித்து வைக்கும் திறன் அரசு மருத்துவமனைகளில் உள்ளது. கொரோனா 2ம் அலையின் போது தயார் செய்த படுக்கை வசதிகள் நம்மிடம் தயார் நிலையில் உள்ளன என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

இன்ப்ளூயன்ஸா ஃப்ளூ
தமிழகத்தில் எச்3 என்2 எனப்படும் இன்ப்ளூயன்ஸா ப்ளூ அதிகளவில் பரவியது. இது மற்ற ப்ளூக்களை விட மிகவும் வேகமாக பரவியது. இதன் அறிகுறிகளும் அதிகமாகும். காய்ச்சல், இருமல், சளி, உடல் வலி, சோர்வு, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை இருந்தன. இந்த ப்ளூ காய்ச்சலுக்கு தடுப்பூசியும் இருந்தது. இந்த ப்ளூ பெரியவர்கள், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்களை அதிகம் தாக்கியது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications