ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு டீம்.. ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்.. எம்.பிக்கள் கூட்டத்தில் பேசியது என்ன?
சென்னை: "நாம் நடத்திய ஒரே ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டம் இந்தியா முழுக்க நம்மை நோக்கி கவனத்தை திருப்பி இருக்கிறது" என திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் பேசியுள்ளார் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்.
திமுக, லோக்சபா, ராஜ்யசபா எம்.பிக்கள் கூட்டம், திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் வேண்டாம் என திமுக, எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தொகுதி மறுவரையறை என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் பிரச்சனை இல்லை. தமிழகத்தின் பிரச்சனை. பல மாநிலங்களின் பிரச்சனை. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 29 கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் நம் சார்பில் தலா ஒரு அமைச்சர், ஒரு எம்.பி. அடங்கிய குழு சென்று விளக்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையில் நமக்கான உரிமையை பெற இது ஒரு தொடக்கம் தான்.
தேசிய அளவிலான கவனத்தை ஈர்க்க அனைத்து எம்.பி.க்களும் ஒன்றுபட்டு செயலாற்றிட வேண்டும். உடனடியாக டெல்லியில் தமிழக எம்பிக்களின் கூட்டத்தை நடத்தி அவர்களது கருத்துகளை கேட்டு செயலாற்றிட வேண்டும்
மாநிலத்தின் உரிமைகளுக்காகவும், மக்களின் நலனுக்காவும் தி.மு.க. எம்பிக்கள் இருக்கிறார்கள். இந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் வேண்டாம்" என அறிவுறுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications