அமைச்சர் பிடிஆரின் மனிதநேயம்.. கால்முறிந்த தெருநாய்க்காக எடுத்த ரிஸ்க்.. குவியும் பாராட்டு.. பின்னணி
சென்னை: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 2021ல் அமைச்சரானதும் சென்னை தலைமை செயலகத்தில் கால்முறிந்த தெருநாயை அவர் பார்த்தார். அந்த தெருநாய்க்கு சிகிச்சை அளித்ததோடு, தற்போது தலைமை செயலகத்தில் இருந்து தெருநாய்கள் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் அவர் செய்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் பழனிவேல் தியாகராஜன். அதன்பிறகு அவரது இலாக்காக மாற்றப்பட்டது. பழனிவேல் தியாகராஜன் இப்போது தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சர்வீஸ் துறையின் அமைச்சராக உள்ளார்.

இந்நிலையில் தான் இன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அந்த பதிவை பார்க்கும் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். இதுதொடர்பாக அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛2021ல் நான் அமைசசரான சில மாதங்களில் ஒரு மாலை நேரத்தில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள எனது அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தேன். அப்போது உடைந்த காலுடன் நாய் ஒன்று இருந்தது. தலைமை செயலகத்தில் இருக்கும் பல நாய்களில் அதுவும் ஒன்று. கால் உடைந்த நாயை நான் பார்த்தேன்.
அதுபற்றி கேட்டபோது சமீபத்தில் தான் விபத்தில் சிக்கி நாயின் கால் உடைந்ததாக கூறினார்கள். இதனால் அந்த நாயின் காலை சரிசெய்து மீண்டும் அதன் இடத்திற்கு கொண்டு சென்று விட வேண்டும் என்று முடிவு செய்தேன். கால்நடை மருத்துவரிடம் சென்றபோது விபத்து நடந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. இதனால் உடைந்த கால் தவறான முறையில் சேர்ந்துள்ளது என்று கூறினார். அதன்பிறகு சில மாதங்கள் வரை சிகிச்சை அளிக்கப்பட்டது.
நாயின் காலை சரிசெய் உலோக தகடு மற்றும் திருகுகள் பயன்படுத்தப்பட்ட. ஒரு கால்நடை மருத்துவர், கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் மனிதர்களுக்கான எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோரின் உதவியுடன் கால் சரிசெய்யப்பட்டது. இந்த வேளையில் நாங்கள் அந்த நாயுடன் மிகவும் பாசமாகிவிட்டோம்.
இதனால் அதற்கு பெயர் வைக்கப்பட்டது. ‛பீச்சஸ்' என்ற பெயரில் அழைத்தோம். எங்களின் குடும்பத்தில் அது ஒரு அங்கமாக மாறிவிட்டது. இதற்கிடையே தான் சமீபத்திய உச்சநீதிமன்ற உத்தரவின் காரணமாக தலைமை செயலகத்தில் இருந்த நாய்கள் பிடித்து செல்லப்பட்டது. அந்த நாய்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டது என்பது எனக்கு தெரியாது. அதேவேளையில் எங்களின் நாயான ‛பீச்சஸ்' சென்னை மாநகராட்சியின் புதிய விதிகளின் கீழ் செல்ல பிராணியாக பதிவு செய்துள்ளோம்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications