தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய மாற்றங்கள்! அமைச்சர் பிடிஆரின் வேற லெவல் திட்டம்!
சென்னை: தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பல புதிய மாற்றங்களை கொண்டுவரத் திட்டமிட்டுள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 3 நாள் சுற்றுப்பயணமாக ஐதராபாத் சென்றிருக்கிறார்.
தமிழக நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் வசம் அண்மையில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது தகவல் தொழில்நுட்பத் துறை மாற்றிக் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த துறையின் செயல்பாடுகள் குறித்து ஒரு மாதத்திற்கும் மேலாக அப்செர்வ் செய்து வந்தார் அமைச்சர் பிடிஆர்.

ஆனால் அதற்குள் ஐடி துறையில் அமைச்சர் பிடிஆருக்கு ஆர்வமில்லை அதனால் தான் ஆக்டிவாக இல்லாமல் அமைதி காப்பதாக தகவல்கள் உலா வரத் தொடங்கின. இதனிடையே வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பழமொழிக்கு ஏற்ப எந்தப் பொறுப்பை தன்னிடம் கொடுத்தாலும் அதில் சிறப்பு சேர்ப்பேன் என்பதை நிரூபிக்கும் முயற்சியில் பிடிஆர் ஈடுபட்டுள்ளார்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பல புதிய மாற்றங்களை கொண்டு வரும் திட்டத்தில் உள்ள அவர், துறைசார்ந்த குழுவுடன் தகவல் தொழில் நுட்பத் துறையில் சிறந்து விளங்கும் நகரமாக கருதப்படும் ஐதரபாத்துக்கு 3 நாள் பயணமாக சென்றிருக்கிறார். அங்கு தெலுங்கானா மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும், முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகனுமான கே.டி.ராமாராவை நேரில் சந்தித்து தகவல் தொழில்நுட்பத் துறை கொள்கைகள், உத்திகள் பற்றி பிடிஆர் கேட்டறிந்துள்ளார்.
கிராமப்புற தொழில் நுட்ப மையங்கள், ஐடி துறை உத்திகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தெலுங்கானா தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமாராவ் எடுத்துக் கூறினார். அதன் அடிப்படையில் தமிழகத்தில் குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பெருநகரங்களில் சில புதிய மாற்றங்களை ஐடி துறையில் முன்னெடுக்கவுள்ளார் அமைச்சர் பிடிஆர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications