தமிழ்நாடு அரசு அதிரடி.. நாளை முதல் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை.. இனி பிரச்சனையே இல்லை
சென்னை: ஒரு கிலோ சாப்பாட்டு அரிசியே 70 ரூபாய்தான். ஆனால் தக்காளி கிலோ ரூ. 200க்கு விற்பனையாகிறது. இந்நிலையில் தக்காளி சாமானிய மக்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க நாளை முதல் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.
சென்னை மக்களின் காய்கறி தேவையை பூர்த்தி செய்யும் இடமாக கோயம்பேடு சந்தை இருக்கிறது. இந்த சந்தைக்கு தினமும் 1,200 டன் காய்கறிகள் வரும். ஆனால் பருவமழை மற்றும் விளைச்சல் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட அளவில் காய்கறிகள் வரவில்லை. குறிப்பாக 85 லாரிகளில் தினமும் 750 டன் தக்காளி சென்னைக்கு வரும்.

ஆனால் கடந்த சில நாட்களாக வெறும் 35 லாரிகளில் மட்டுமே தக்காளி வந்திருக்கிறது. அதாவது தக்காளி வரத்து பாதியாக குறைந்திருக்கிறது. எனவே விலை அதிகமாக இருக்கிறது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், "கடந்த மாதம் முழுவதும் தக்காளி கிலோ.10 ரூபாய்க்குதான் விற்பனையானது. மேலும் அதிக அளவில் மீதமிருந்ததால் நாங்கள் கொட்டிவிட்டோம். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது. வழக்கமாக வரும் லோடு எதுவும் இன்று வரவில்லை.
வரத்து பற்றாக்குறைதான் இந்த விலையேற்றத்திற்கு காரணம். மட்டுமல்லாது சில வியாபாரிகள் குளிர்சாதன கிடங்கில் சேமித்து வைத்து அடுத்த நாளும் விற்பனை செய்கின்றனர்.
ஆனால் எல்லா வியாபாரிகளுக்கும் இது சாத்தியமில்லை. எனவே அரசு குளிர்சாதன கிடங்குகளை கட்டி தர வேண்டும். அப்போதுதான் வியாபாரிகள் காய்கறிகளை சேமித்து வைத்து தட்டுப்பாடு ஏற்படாமல் விற்பனை செய்ய முடியும். தற்போது 15 கிலோ தக்காளி பெட்டி ரூ.800-900 வரை வாங்கி வருகிறோம்" என்று கூறியிருந்தனர். இதனால் தக்காளி கிலோ ரூ.160 முதல் 180 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில இடங்களில் கிலோ ரூ.200ஐ தாண்டியிருக்கிறது.
இதனால் சாமானிய மக்களுக்கு தக்காளி கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனை தவிர்க்க உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.75 என விற்பனை செய்யப்பட்டது. ஆனாலும் விற்பனை தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே எல்லா தக்காளியும் விற்று தீர்ந்துவிடுவதால் அனைத்து தரப்பு மக்களுக்கும் தக்காளி சென்று சேர்வது சாத்தியமில்லாததாக மாறியுள்ளது. எனவே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி சில இடங்களில் போராட்டங்களும் நடந்து வருகின்றன.
இந்நிலையில், நாளை முதல் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "தக்காளி விலையை கட்டுப்படுத்த மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் நாளை முதல் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். ஏற்கனவே 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 200 கடைகளில் விற்பனை செய்யப்படும்.
வெளிச்சந்தையில் ரூ.180க்கு தக்காளி விற்கப்படும் நிலையில், அரசு சார்பில் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விளைச்சல் குறைந்ததால் வரத்து அடிவாங்கியுள்ளது. எனவேதான் விலை உயர்ந்துள்ளது" என்று கூறியுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications