“எடப்பாடி பழனிசாமி வேண்டுமானால் அடிமையாக கிடைக்கலாம்..” போகிற போக்கில் சாடிய அமைச்சர் ரகுபதி
சென்னை: திருப்பரங்குன்றத்தில் தர்காவுக்கு பக்கத்தில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக, தமிழ்நாடு அரசுக்கும், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதியின் உத்தரவை அமல்படுத்த கோரும் பாஜக, இந்துத்துவா அமைப்புகளுக்கும் இடையே பஞ்சாயத்துகள் வெடித்திருக்கின்றன. இந்நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ரகுபதி, இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மீது விமர்சனத்தை அடுக்கியுள்ளார்.
அவர் பேசியதாவது, "தமிழ்நாட்டில் பாஜகவினருக்கு அடிமையாக பழனிசாமி வேண்டுமானால் கிடைப்பார். மற்றபடி வேறு யாரும் கிடைக்க மாட்டார்கள். மத ஒற்றுமை, மத நல்லிணக்கம் இவற்றுக்கு எடுத்துக்காட்டான பூமி இந்தியாவிலேயே தமிழ்நாடுதான். அதை இன்றைக்கும் நாம் நிரூபித்துக் கொண்டிருக்கின்றோம்.

பழனிச்சாமிக்கு வேற வேலையே கிடையாது. தமிழ்நாடு அரசு மீது ஏதாவது குற்றச்சாட்டை சொல்ல வேண்டும் என்பது ஒன்றுதான் அவருடைய வேலை. இந்த சம்பவத்தையும் அவர் எடுத்துக்கொண்டு, இதிலே தமிழர்களுக்கு ஆதரவாக, தமிழக அரசுக்கு ஆதரவாக நிற்க வேண்டியவர், இந்துத்துவாவுக்கு அடிமையாக இருந்திருக்கிறார் என்பதை இதன் மூலமாக நிரூபித்திருக்கிறார்.
கடந்த 2014ம் ஆண்டு.. அதிமுகவினர் அம்மா அம்மா என்று போற்றிக் கொண்டிருக்கிறார்களே.. அப்பேர்பட்ட அம்மையார் காலத்தில் வந்த தீர்ப்புதான் இது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இந்த தீர்ப்பு வந்திருப்பதால், ஜெயலலிதா அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறியதை தான் நாங்கள் கூறுகிறோம்.
அன்றைக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வைத்த வாதம் இதுதான். அதாவது, இன்று திருப்பரங்குன்றத்தில் எங்கு தீபம் ஏற்றப்பட்டு இருக்கிறதோ, அதே இடத்தில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். அரசு தரப்பிலும் நீதிமன்றத்தில் இதே வாதத்தைதான் முன் வைத்திருக்கிறார்கள். ஆனால், இன்று இதை எதிர்ப்பதன் மூலம், தான் முழு அடிமை என்பதை, அடிமை சாசனமாக எடப்பாடி பழனிசாமி எழுதிக் கொடுத்திருக்கிறார். இதற்காக அதிமுக தொண்டர்கள் வெட்கப்பட வேண்டும்" என்று காட்டமாக கூறியுள்ளார்.
-
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்.. சிவி சண்முகத்தை அடுத்து சி. விஜயபாஸ்கரும் பரபர ட்வீட் பதிவு -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications