Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லஞ்ச அதிகாரிக்கு இடமாற்றம் தான் தண்டனையா? ஆவேசமான அமைச்சர் ராஜகண்ணப்பன்.. கேமரா மீது “அட்டாக்”

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் நடந்த ரெய்டில் 35 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் நடராஜன் இடமாற்றம் குறித்து கேள்வி எழுப்பிய ஆங்கில தொலைக்காட்சி செய்தியாளரால் கோபமடைந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் கேமராவை தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை சேப்பாக்கம் எழிலகம் கட்டிடத்தில் இயங்கி வரும் போக்குவரத்து துறை ஆணையரக அலுவலகத்தில் துணை ஆணையராக நடராஜன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

அவரது அலுவலகத்தில் பணியிட மாற்றத்திற்காக கண்காணிப்பாளராக பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீர் சோதனை நடைபெற்றது.

அமைச்சர் ராஜகண்ணப்பன்

அமைச்சர் ராஜகண்ணப்பன்

அலுவலகத்தில் உள்ள 30 உதவியாளர்களிடம் இருந்து கணகாணிப்பாளர் பதவி உயர்வுக்காக 5 லட்சம் பெறுவதாக புகார் எழுந்த நிலையில் சோதனையில் கணக்கில் வராத 35 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் துறையின் அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது தொடர்பிருப்பதாக கூறப்பட்டது.

35 லட்சம் ரூபாய் லஞ்சம்

35 லட்சம் ரூபாய் லஞ்சம்

கையும் களவுமாக நடராஜன் பிடிபட்ட நிலையில் அங்கு பணம் எண்ணுவதற்காகவே 2 இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டது.எழிலகத்தில் அவரது அறையிலும், அவரது உதவியாளர் முருகன் அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. அதில், 35 லட்சம் ரூபாய் லஞ்ச பணம் கைப்பற்றப்பட்ட நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் நடராஜன் திருநெல்வேலிக்கும், முருகன் நாகர்கோவிலுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

துறை மாற்றம்

துறை மாற்றம்

இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். 100 ரூபாய் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் கைது செய்யப்படும் நிலையில், நடராஜனுக்கு பணியிட மாற்றம் தான் தண்டனையா என பலரும் கேள்வி எழுப்பினர். நடராஜனை அமைச்சர் ராஜகண்ணப்பன் தான் காப்பாற்றுகிறார் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் அரசு அதிகாரியை சாதிய ரீதியாக திட்டியதாகவும் ராஜ கண்ணப்பன் மீது பகீர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அமைச்சர் ராஜகண்னப்பன் போக்குவரத்து துறையில் இருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

கேள்வியால் ஆவேசம்

கேள்வியால் ஆவேசம்

இதனிடையே 35 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற நடராஜனுக்கு பணியிட மாற்றம் குறித்து கேள்வி எழுப்பிய ஆங்கில தொலைக்காட்சியின் கேமராவை அமைச்சர் ராஜகண்ணப்பன் தாக்கிய சம்பவம் மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. பிரபல ஆங்கில தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளர் அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் நடராஜன் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த அவர், கேமராவை கையால் தட்டிவிட்டு ஆவேசமாக அங்கிருந்து சென்றார். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+