சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரூ 1000 உரிமை தொகை.. ரேசன் அட்டையில் குடும்ப தலைவி படம் வேண்டுமா? அமைச்சர் தந்த முக்கிய அப்டேட்

Google Oneindia Tamil News

சென்னை: குடும்பத் தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் குடும்ப அட்டையில் பெயர் மாற்ற வேண்டுமா என்பது குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார் என உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

குடும்பத் தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் குடும்ப அட்டையில் பெயர் மாற்ற வேண்டுமா என்பது குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார் என அவர் கூறினார்.

 வெறிச்சோடிய சென்னை.. எகிறும் தொற்று பாதிப்பு.. மீண்டும் பரவுகிறதா.. கலக்கத்தில் மக்கள் வெறிச்சோடிய சென்னை.. எகிறும் தொற்று பாதிப்பு.. மீண்டும் பரவுகிறதா.. கலக்கத்தில் மக்கள்

அமைச்சர் சக்கரபாணி பேட்டி

அமைச்சர் சக்கரபாணி பேட்டி

இது தொடர்பாக அவர் கூறுகையில், "கொரோனா தொற்றில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு 14 வகையான மல்லிகை பொருட்கள் மற்றும் 4000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. இதுவரை 99% குடும்ப அட்டைதாரர்களுக்கு 14வகை பொருட்களும் 4000 ரூபாய் நிவாரணத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் பொது வினியோக திட்டக் கடைகளில் தரமற்ற மற்றும் நிறமற்ற அரிசி வழங்குவதாகப் புகார்கள் வந்துள்ளது.

நெல் கொள்முதல்

நெல் கொள்முதல்

கடைகளில் வந்தடைந்த தரமற்ற அரிசிகள் திரும்பப் பெறப்பட்டு தரமான அரிசி வழங்கப்பட்டு வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஜூலை மாதம் வறை 40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அரிசி மற்றும் நெல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 3 மாத காலத்தில் அரிசி மற்றும் நெல் விவகாரத்தில் 1800 வழக்குகள் பதியப்பட்டு, 1859 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அரிசி மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 283 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

ரேசன் கடைகள்

ரேசன் கடைகள்

8,000 ரேசன் கடைகள் சொந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் ரேசன் கடைகளுக்குச் சொந்த கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 4000 ரூபாய் நிவாரணம் வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம். அரிசி ஆலை முகவர்களைச் சந்தித்து கூட்டம் நடத்தியுள்ளோம். விரைவில் தமிழ்நாட்டில் உள்ள ஆலைகளில் ஆகஸ்ட் 21க்குள் கலர் சர்க்கஸ் (colour sortex) பொருத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்

கருப்பு நிறம் கொண்ட எந்த அரசையும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பக்கூடாது என்றும் அரிசி ஆலை முகவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் பயோமெட்ரிக் மூலம் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது கூடிய விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அச்சம் வேண்டாம்

அச்சம் வேண்டாம்

குடும்பத் தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் குடும்ப அட்டையில் குடும்பத் தலைவிகளின் பெயர் முதலில் இருக்கும் வகையில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா வேண்டாமா என்ற விவகாரத்தில் யாரும் அச்சமடைய வேண்டும். இது குறித்து முதல்வரிடம் ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான முடிவினை தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பார்" என்று அவர் தெரிவித்தார்.

English summary
Minister Sakkarapani's latest update on Rs 1000 for housewives scheme. Ration rice quality complaint Minister Sakkarapani.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X