இபிஎஸ் எண்ணத்தில் விழுந்த மண்.. பதிலடி கொடுத்த சேகர்பாபு.. ஒட்டுமொத்த பாராட்டும் முதல்வருக்குதான்
சென்னை: தமிழகத்தில் பெருமழையின் போது வெள்ளம் ஏற்பட்டு அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து விடும். பொதுமக்கள் பால், மின்சார விநியோகம் இல்லாமல் சிரமத்துக்குள்ளாவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி நினைத்தார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவரின் அந்த எண்ணத்தில் மண் விழுந்துவிட்டது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு,"எடப்பாடி பழனிசாமி கண்ணை மூடிக் கொண்டே வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் மழையின்போது பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என்று கூறுகிறார். இந்த பெருமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட எந்தப் பகுதிக்கு அவர் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

எந்தப் பகுதியில் எடப்பாடி பழனிசாமி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார் என்பதை எடுத்துக் கூற வேண்டும். பலத்த மழையின்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். காலை முதல் இரவு வரை களத்தில் நின்றவர்தான் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 2015 ஆம் ஆண்டு பெருமழை வெள்ளத்தின்போது காலையில் 7 மணிக்கு புறப்பட்டால் மதியம் 3 மணிக்கு வீட்டுக்கு வருவார். மீண்டும் 4 மணிக்கு புறப்பட்டால் இரவு 10 மணிக்குத்தான் வீட்டுக்கு வருவார்.
பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மக்களுக்கு ஆறுதல் தருவதுடன், நிவாரணங்களையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். தமிழ்நாட்டின் வலி நிவாரணியாக இருந்து மக்களைப் பாதுகாத்து வருகிறார். 2019 காலங்களில் கொரோனா பெருந்தொற்று காலங்களில் முதல் முறையாக கொரோனோவால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்குச் சென்று சந்தித்தவர் முதல்வர். அதேபோல அவர்களுக்கு உதவும் வகையில் தனி செயலியை அமைத்து ஆதரவற்றவர்கள் முதல் அனைவருக்கும் உதவி செய்யப்பட்டது.
இதேபோல, பல்வேறு சமயங்களிலும் களத்தில் நின்று மக்களுக்கு பணியாற்றியவர் முதல்வர். இதுபோல எதாவது எடப்பாடி செய்துள்ளாரா?. அவர்கள் நினைத்ததெல்லாம் இந்த பெருமழையின்போது வெள்ளத்தில் நிர்வாகம் ஸ்தம்பித்துவிடும். மக்கள் மின்சார விநியோகம், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் சிரமப்படுவார்கள் என்று கருதினர். இவர்கள் நினைத்த மின் தடையும் இல்லை. எங்கும் தண்ணீரும் தேங்கவில்லை.
எதிர்க்கட்சித் தலைவரின் எண்ணத்தில் மண் விழுந்துவிட்டது. வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்வதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து ஒட்டுமொத்த பாராட்டுகளையும் பொதுமக்களிடமிருந்து பெற்றுள்ளார். அவருடைய பணியை அவர் செய்யட்டும். முதல்வர் பாணியில் மக்கள் பணி செய்வதுதான் எங்கள் கடமை. பா.ஜ.க. தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தன் இருப்பினை காட்டிக் கொள்வதற்காக எதாவது பேசி வருகிறார்.
இந்து சமய அறநிலையத் துறை உருவாக்கப்பட்டதில் இருந்து தலை சிறந்த அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. அன்னதான திட்டத்தில் 20 திருக்கோயில்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஆட்சி அமைந்த போது இரண்டு கோயில்களிலும் முழு நேர அன்னதான திட்டம் இருந்தது. தற்போது இது 11 திருக்கோவில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அன்னப்பிரசாதம் இதுவரை மீனாட்சி அம்மன் திருக்கோவில்களில் மட்டும் பக்தர்களுக்கு லட்டு வழங்குகின்ற நிகழ்வு நடைபெற்றது. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 20 திருக்கோவில்களில் கட்டணம் இல்லாமல் வருகின்ற அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது. ஒன்றிய அரசு அறிவிக்கும் முன்னரே காசி, ராமேஸ்வரம் ஆன்மீக பயணம் அறிவித்து 2 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது இந்த அரசு. இந்த ஆண்டு 2,500 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
-
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications