"அதிமேதாவிகள்.. களத்திற்கு வராத தற்குறிகள்!" தவெக தலைவர் விஜய்க்கு அமைச்சர் சேகர்பாபு கொடுத்த பதிலடி
சென்னை: நடிகர் விஜய் நேற்றைய தினம் புத்தக வெளியீட்டு விழாவில் திமுகவை சாடும் வகையில் சில கருத்துகளைக் கூறியிருந்தார். இதற்கிடையே விஜய்யின் கருத்திற்கு திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் அமைச்சருமான சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். விஜய்யை களத்திற்கு வராத தற்குறிகள் என்றும் அதிமேதாவிகள் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நேற்றைய தினம் சென்னையில் அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

விஜய்: முதலில் இந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய் கலந்து கொள்வதாக இருந்தது. இருப்பினும், சில காரணங்களால் திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. புத்தகத்தை வெளியிட்ட விஜய், அப்போது திமுகவை மறைமுகமாக சாடியிருந்தார். இறுமாப்போடு சிலர் 200 தொகுதிகளில் வெல்வதாகப் பேசுவதாகவும் அவர்களின் நம்பிக்கை 2026இல் வீணாகப் போகும் என்பது போலப் பேசியிருந்தார்.
இதற்கிடையே அமைச்சர் சேகர்பாபு அதற்குப் பதிலடி கொடுத்துள்ளார். திமுக நம்பிக்கை வீணாகும் என்று சில அதிமேதாவிகள் பேசிக் கொண்டு இருப்பதாகவும் திமுக 200 இல்லை 234 தொகுதிகளிலும் வெல்லும் என்று அவர் பதிலடி கொடுத்துள்ளார். மேலும், திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பது மக்களின் நிலைப்பாடு என்றும் அதை யாராவது தடுக்க முடியும் என்று நினைத்தால் அது பகல் கனவாகவே இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சேகர்பாபு: சென்னையில் நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி, "தமிழ்நாட்டிற்குத் தேவையான பல அடுக்கடுக்கான நல்ல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வருகிறார். பாலியல் குற்றச்சாட்டுகள் நடந்தால் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.. வழக்குப் பதிவு செய்வதோடு மட்டுமில்லாமல் நீதியும் உடனடியாக பெற்றுத் தந்து நீதி தேவனின் ஆட்சியே தமிழ்நாட்டில் நடந்து வருகிறது.
திமுக ஆட்சி மீண்டும் தொடர வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு... அதை யாராவது தடுக்க முடியும் என்று நினைத்தால் அது பகல் கனவாகவே இருக்கும். 2026 தேர்தலில் திமுக 200 தொகுதியில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை வீணாகும் என்று சிலர் அதிமேதாவிகளாகத் தற்குறிகளாகக் களத்திற்கு வராமல் பேசுகிறார்கள். ஆனால், எங்கள் நிலைப்பாடு 200 அல்ல 234 தொகுதிகளையும் வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி கைப்பற்றும்
வேகம் குறையாது: எப்போதும் 80 கிமீ வேகத்தில் பயணிக்கும் திமுக தொண்டன், திமுகவுக்கு எப்போதெல்லாம் இதுபோல அவதூறுகள் ஏற்படுகிறதோ.. அப்போதெல்லாம் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பை போல 100 கிமீ வேகத்தில் பயணிப்பான். 2026ல் திமுக தலைவரை மீண்டும் அரியணை ஏற்றும் வரை எங்கள் வேகம் குறையாது" என்று பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய் என்ன பேசினார்: முன்னதாக நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய தவெக தலைவர் விஜய், "இங்கே மக்கள் உரிமைகளை மதிக்கத் தெரியாத, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத சிலர், கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்போடு 200 தொகுதிகளில் வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடுகிறார்கள். அந்த மக்கள் விரோத ஆட்சியாளர்களை என் மக்களோடு இணைந்து நான் எச்சரிக்கிறேன். உங்கள் சுய நலனுக்காகப் பாதுகாத்து வரும் கூட்டணி கணக்குகள் 2026இல் ஆகிவிடும்" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications