பலரும் அறியாத சிறுவாபுரி ரகசியம்.. விசாக நட்சத்திரத்தில் முருகனை தரிசக்க ஓடி வந்த சேகர்பாபு.. ஏன்?
சென்னை: விசாக நட்சத்திரத்தில் சிறுவாபுரி முருகனை தரிசித்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார். அமைச்சர் விசாக நட்சத்திரத்தில் முருகனை தரிசனம் செய்தது ஏன்.. அப்படி தரிசனம் செய்வதால் என்னென்ன நன்மைகள் என்று ஆன்மீக ரீதியாக கூறப்படும் காரணங்கள் என்ன.. ஏன் சிறுவாபுரிக்கு பலரும் செல்கிறார்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

விநாயகர், மூலவர், உற்சவர், ஆதிமூலவர், நவகிரக சன்னதிகளில் வழிபாடு செய்த அமைச்சர் சேகர்பாபுவிற்கு ஆலய நிர்வாகம் சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, விசாக நட்சத்திரத்தில் சிறுவாபுரி முருகனை தரிசித்துள்ளதாகவும், அல்லவைகளை புறந்தள்ளி நல்லவைகளை கொடுப்பவர் முருகர் எனவும் மனதார பிராத்தித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
தேர்தல் கருத்துக்கணிப்புகள் குறித்த கேள்விக்கு, ஏற்கனவே கட்டங்களை உடைத்து எறிந்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் எனவும், கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தேர்தலுக்குப் பின் எரிவாயு விலை உயர்வு குறித்த கேள்விக்கு பதில் அளித்த சேகர்பாபு, மத்திய அரசு வாடிக்கையாக செய்யும் செயல் எனவும், தேர்தலுக்கு தேர்தல் தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல் எனவும் அதற்கு இதுவும் ஒரு உதாரணம் என்றார். எரிவாயு விலை உயர்வு தொடர்பாக தமிழிசை சௌந்திரராஜன் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து அமைச்சர் சேகர்பாபு புறப்பட்டுச் சென்றார்.
சிறுவாபுரிக்கு வந்தது ஏன்
முன்னதாக விசாக நட்சத்திரத்தில் சிறுவாபுரி முருகனை தரிசித்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார். அமைச்சர் விசாக நட்சத்திரத்தில் முருகனை தரிசனம் செய்தது ஏன்.. அப்படி தரிசனம் செய்வதால் என்னென்ன நன்மைகள் என்று ஆன்மீக ரீதியாக கூறப்படும் காரணங்கள் என்ன.. ஏன் சிறுவாபுரிக்கு பலரும் செல்கிறார்கள் என்பதையும் பார்ப்போம்.
விசாக நட்சத்திரம் முருகன்
விசாகம் என்பது ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இது முருகனின் ஆறு முகங்களைக் குறிப்பதாலும், அவர் அவதரித்த தினமாக இருப்பதாலும் இந்த நாளில் செய்யப்படும் தான தர்மங்கள் பல மடங்கு புண்ணியத்தைத் தரும் என்பார்கள். அமைச்சர் சேகர்பாபு அவர்கள் வைகாசி விசாகம் அல்லது விசாக நட்சத்திரம் வரும் நாட்களில் திருத்தணி அல்லது சிறுவாபுரி போன்ற புகழ்பெற்ற முருகன் தலங்களில் தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். முன்பேசொன்னது போல் முருகப் பெருமானின் அவதார நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தில் அவரைத் தரிசிப்பது ஆன்மீக ரீதியாக மிகுந்த மகத்துவம் வாய்ந்தது.
கண்ணுக்கு தெரியாத எதிர்ப்பு விலகும்
முருகன் "விசாகன்" என்று அழைக்கப்படுகிறார். முருகப் பெருமான் ஞானத்தின் வடிவம். விசாக நட்சத்திரத்தில் அவரை வழிபடுவது மாணவர்களுக்குக் கல்வியிலும், மற்றவர்களுக்குத் தெளிவான முடிவெடுக்கும் திறனிலும் (ஞானம்) முன்னேற்றத்தைத் தரும் என்பது நம்பிக்கை. விசாக நட்சத்திரம் என்பது தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டும் சக்தியைக் கொண்டது. இந்த நாளில் முருகனைத் தரிசித்தால் நம் வாழ்வில் உள்ள கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத எதிர்ப்புகள் விலகும் என்பது ஆன்மீக பெரியவர்களின் நம்பிக்கையாகும்
குழந்தை பாக்கியம்
வைகாசி விசாகம் போன்ற நாட்களில் முருகனை வேண்டி விரதம் இருந்தால், புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்குக் குழந்தை செல்வம் கிட்டும் என்பது பல பெண்களின் நம்பிக்கையாக உள்ளது. விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கும் முருக வழிபாடு ஒரு சிறந்த பரிகாரமாகும். இது திருமணத் தடைகளை நீக்க வல்லது என்கிறார்கள் ஜோதிடர்கள்.
சொந்த வீடு வாங்கலாம்
புதிய தொழில்கள் தொடங்கவோ அல்லது நிலுவையில் உள்ள முக்கிய வேலைகளை முடிக்கவோ இந்த நாளில் முருகனைத் தரிசித்து வேண்டிக்கொண்டால் வெற்றி நிச்சயம் என்கிறார்கள். அதேபோல் அமைச்சர் சேகர்பாபு தரிசித்த சிறுவாபுரி முருகன் தலம் மிகவும் விசேஷமானது. சிறுவாபுரி முருகனைத் தொடர்ந்து தரிசித்தால் சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. வாழ்வில் முன்னேறத் துடிப்பவர்கள், பதவிகளில் உயர்வு பெற விரும்புபவர்கள் சிறுவாபுரி முருகனை விசாக நட்சத்திர நாட்களில் தரிசிப்பது கூடுதல் பலன் தரும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications