என் அப்பாவால் உயிருக்கு ஆபத்து.. முதல்வர் வீட்டுக்கு செல்கிறேன்! அமைச்சர் சேகர்பாபுவின் மகள் கண்ணீர்
சென்னை: என் அப்பாவால் உயிருக்கு ஆபத்து, என் கணவர் மீது இஷ்டத்திற்கு கேஸ் போடுகிறார்கள். நான் முதல்வரை பார்க்க வேண்டும் என இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவின் மகள் ஜெயகல்யாணி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சதீஷ்குமாரும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவின் மகள் ஜெயகல்யாணியும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணத்திற்கு அமைச்சர் சேகர் பாபு எதிர்ப்பு என மகள் குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில் பெண்ணை மிரட்டிய வழக்கில் அமைச்சர் சேகர்பாபு மருமகன் சதீஷை சென்னை புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீஸில் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக சேகர்பாபு மருமகன் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில்தான் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபுவின் மகள் நீதிமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் என் கணவர் மீது கடந்த 2016ஆம் ஆண்டு 23 வயது பெண் ஒருவர் கொடுத்த கேஸ் ஒன்று உள்ளது. இது தவிர அவர் மீது சிறிய சிறிய கேஸ்கள் இருக்கின்றன. என் தந்தையின் பேச்சை கேட்டுக் கொண்டு இன்ஸ்பெக்டர்கள் சிலர் எனது கணவர் மீது பொய் வழக்கு போட்டு குற்றவாளியாக்குகிறார்கள். எங்கு எது நடந்தாலும் எனது கணவரின் பெயரை முதல் ஆளாக சேர்க்கிறார்கள்.

நான் கர்ப்பிணியாக இருந்த போதுகூட என் தந்தை என்னை நிம்மதியாக இருக்கவிடவில்லை. என்னை ஊர் ஊராக அலைய வைத்தார். எனக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தற்போது உடல்நிலை சரியில்லை. அதனால் பூந்தமல்லியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம். எனது கணவரை மருத்துவமனையில் வைத்தே கைது செய்துள்ளனர்.
அவரை நேற்று கைது செய்து 4 மணி நேரமாகியும் அவரை பார்க்க என்னை போலீஸார் அனுமதிக்கவில்லை. என் கணவர் மீது பொய் கேஸ் போடும் இன்ஸ்பெக்டர்களுக்கு என் அப்பாதான் டிஜிபி, கமிஷனர் எல்லாமே!. அவர் சொல்வதைத்தான் இவர்கள் செய்கிறார்கள். இந்த நீதிமன்றத்திற்கு வந்த போது கூட முதல்வர் ஸ்டாலின் தொகுதியை சேர்ந்த கட்சிக்காரர்கள், என் அப்பாவின் ஆட்கள் என்னை மிரட்டியதை சிலர் பார்த்திருப்பீர்கள்.
அது போல் அராஜகம் நடக்கிறது, முதல்வர் ஸ்டாலினுக்கு எதற்காக ஓட்டு போட்டோம். திமுக வந்தால் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்பதால்தானே! ஆனால் திமுக அமைச்சரின் மகளான எனக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை எப்படியிருக்கும்? என் கணவர் மீது பொய் வழக்கு போடுகிறார்கள் என கமிஷனர், டிஜிபி உள்ளிட்டோருக்கு மனு அளித்துவிட்டேன். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.
என் கணவருடன் தோழியாக பழகிய ஒரு பெண், அவருக்கும் திருமணமாகி குழந்தை இருக்கிறது. அந்த பெண்ணை என் அப்பாவின் ஆட்கள் மிரட்டி என் கணவர் மீது பொய் புகார் கொடுக்க கூறியுள்ளார்கள். அந்த பெண்ணுக்கு அரசு வேலை தருவதாகவும் பேரம் பேசியுள்ளார்கள். இதை எல்லாவற்றையும் போலீஸ் ஸ்டேஷனில் வைத்தே செய்துள்ளார்கள். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அந்த இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணை எப்படி பேச வைத்தார் என்பதை என் அப்பாவிற்கு அனுப்பிய ஸ்கிரீன்ஷாட்டுகளும் என்னிடம் உள்ளன. அந்த பெண்ணே என் கணவருக்கு போன் செய்து போலீஸார் மிரட்டி வாக்குமூலம் வாங்கிய ஆடியோவும் இருக்கிறது.

என் கணவரை பார்க்கவிடாமல் என்னை தடுக்கிறார்கள். என் கணவரின் சட்டை, பேண்ட் கிழிந்துள்ளதாக அங்கிருந்த சிலர் எனக்கு தகவல் கொடுத்தனர். தமிழகத்தில் லாக் அப் மரணங்கள் அதிகரித்துள்ள நிலையில் என் கணவருக்கும் ஏதாவது ஆகிவிடுமோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. இதற்காக நான் முதல்வர் வீட்டுக்கு செல்லவுள்ளேன். அவரை பார்த்து என்னிடம் உள்ள ஆதாரங்களை சமர்ப்பிப்பேன்.
அதில் எங்கள் பக்கம் நியாயம் இருந்தால் என் கணவர் மீது பொய் வழக்கு போட்ட இன்ஸ்பெக்டர்கள் பதவி நீக்கப்பட வேண்டும். என் அப்பாவை என்ன செய்ய வேண்டும் என்பது முதல்வருக்கு தெரியும். அது போல் எங்கள் மீது தவறு இருந்தால் முதல்வர் என்னை கைது செய்ய உத்தரவிடட்டும். எனக்கு அதிகபட்ச தண்டனை என்னவோ அதை கொடுக்கட்டும். இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு மகள் ஜெயகல்யாணி தெரிவித்தார்.
-
தமிழகத்தில் 10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. மொத்தமாக எகிறிய வெப்பநிலை! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. சென்னையில் 2 நாளைக்கு விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் எச்சரிக்கை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை!












Click it and Unblock the Notifications