கருணாநிதி 100! 10 நிமிடத்துக்கு மேல் பேச வேண்டாம்! கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு சேகர்பாபு டைம்!
சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களை 10 நிமிடத்துக்கு மேல் பேச வேண்டாம் அமைச்சர் சேகர்பாபு சொன்னது மேடையில் இருந்த பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
குறிப்பாக கே.எஸ்.அழகிரி, வேல்முருகன் போன்றோர் அமைச்சர் சேகர்பாபுவின் இந்த 10 நிமிடம் அவகாசம் பேச்சை ரசிக்கவில்லை. திருமாவளவன் பேசி முடித்த பிறகு முத்தரசன் பேச வந்த போது சேகர்பாபு இவ்வாறு கூறியது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து வந்து மேடையில் அமர வைத்து 10 நிமிடம் மட்டுமே பேச வேண்டும் எனச் சொல்லியது தேவையற்ற நிகழ்வாக கருதப்படுகிறது.
சென்னை பின்னி மில் மைதானத்தில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் தொடக்கவிழாவில், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களான கொங்கு ஈஸ்வரன், வேல்முருகன், ஜவாஹிருல்லா, காதர் மொகைதீன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், வைகோ, கி.வீரமணி, கே.எஸ்.,அழகிரி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கம்யூனிஸ்ட் கட்சிகள், வேல்முருகன் போன்றோர் எல்லாம் ஏற்கனவே கூட்டணிக் கட்சியின் ஆட்சி மீது பல்வேறு விவகாரங்களில் மிகக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இந்தச் சூழலில் அவர்களை சீண்டிப்பார்க்கும் வகையில் 10 நிமிடங்களுக்கு மேல் பேசக் கூடாது என அமைச்சர் கூறியது கூட்டணியில் தான் தேவையற்ற குழப்பத்தை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது தொகுதிக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களை அடிக்கடி அழைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர்களை கவுரவிக்கக் கூடியவர் அமைச்சர் சேகர்பாபு என்றும், சென்னையில் சட்டென்று மாறிய வானிலை காரணமாகவும் மழை வந்துவிடுமோ என்ற ஐயத்தாலும் தான் அமைச்சர் கூட்டணிக் கட்சித் தலைவர்களை விரைந்து பேசச் சொன்னார் என காரணம் கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
-
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு












Click it and Unblock the Notifications