ஓமிக்ரான் அச்சம்.. தமிழகத்தில் கோயில்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்? அமைச்சர் சேகர்பாபு முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் ஓமிக்ரான் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் கோயில்களுக்கு எதாவது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் சேகர்பாபு முக்கிய தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஓமிக்ரான் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதுவரை இந்தியா முழுவதும் மொத்தம் 653 பேர் ஓமிக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது,

 ஓமிக்ரான் கேஸ்கள்

ஓமிக்ரான் கேஸ்கள்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதுவரை 34 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஓமிக்ரான் பாதிப்பைக் கருத்தில் கொண்டு மாநில அரசுகள் தேவைப்பட்டால் கட்டுப்பாடுகளை அறிவிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் கோயில்களுக்கு எதாவது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் சேகர்பாபு முக்கிய தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

 ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனைக் கூட்டம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் மண்டல இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்ட மன்ற மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றுவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

 மானிய கோரிக்கை

மானிய கோரிக்கை

அப்போது செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "மானிய கோரிக்கையில் 112 அறிவிப்புகள் துறை சார்பாக அறிவிக்கப்பட்டது. அதில் 600க்கும் மேற்பட்ட பணிகளில் இருந்த நிலையில் 7 மாதத்தில் 450 பணிகளுக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல இதுவரை ரூ 1500 கோடி மதிப்பிலான சொத்துக்கள், 456 நபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் முதல்வர் ஸ்டாலின் காலம் பொற்காலம்.

 லிப்ட் வசதி

லிப்ட் வசதி

இன்று அதிகாரிகளுடன் 7வது முறையாகத் திட்டங்கள் நிறைவேற்றுவது தொடர்பாகக் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் கோயில்களில் தரமான குங்கும் விபூதி வழங்குவது, முதலுதவி மையங்கள் ஏற்படுத்துதல், புதுப்பிக்க வேண்டிய குளங்கள் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தருவது தொடர்பாகவும் ரோப் காரை தொடர்ந்து இரண்டு கோவிலில் லிப்ட் வசதி ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், சென்னை, பழனி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மூத்தோரைப் பாதுகாக்கக் குடியிருப்பு அமைப்பது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

 கோயில் சிலைகள்

கோயில் சிலைகள்

இதுவரை 551 கோயில் திருப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புத்தாண்டில் கோயிலில் பணியாற்றுபவர்களுக்குப் புத்தாடை வழங்குவது குறித்தும் ஆலோசனை செய்து வருகிறோம். திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கோயில் சிலைகளைப் பாதுகாப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. 30 ஆண்டுகளுக்கு மேலாகக் காணாமல் போன கோயில் சிலை உட்பட 20 இடங்களில் திருடு போன சிலையை மீட்டுள்ளோம்" என்று அவர் கூறினார்.

 கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்

தொடர்ந்து ஓமிக்ரான் பரவலால் கோயில்களில் எதாவது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "ஒமிக்ரான் பரவல் தாக்கம் குறித்து ஆராய்ந்தும், பக்தர்கள் மகிழ்ச்சிக்கு இடையூறு இல்லாமலும் கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் முடிவு எடுப்பார். டிச. 30 மற்றும் 31 தேதிகளில் முதல்வர் தலைமையில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தப்படும். அதன் பின் முடிவுகளை முதல்வர் அறிவிப்பார்" என்றார்.

 தீ விபத்து

தீ விபத்து

மேலும், கோயில்களில் தீ விபத்துகள் ஏற்படாத வகையில் (fire audit) ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும் இடியும் நிலையில் சிதிலமடைந்த கோயில்கள் குறித்து தகவல் கிடைத்த உடனே துறை சார்ந்த பொறியியல் அதிகாரிகள் ஆய்வு செய்து , உரிய நடவடிக்கை மேற்கொள்வர் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+