அதான் அம்மா அன்னிக்கே சொல்லிட்டாங்களே.. அது வேறு .. இது வேறு.. செங்கோட்டைன் பளிச்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தேர்தல் கருத்துகணிப்புக்கள் வேறு, மக்களின் மனநிலை வேறு எனவும், கருத்துக் கணிப்பை மீறி 2 தேர்தல்களில் தாங்கள் வெற்றி பெற்றிருப்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அமைச்சர் பல முக்கியமான கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார். அவரின் பேட்டியின் முழு விபரத்தை இங்கே காணலாம். சென்னை : தேர்தல் கருத்துகணிப்புக்கள் வேறு, மக்களின் மனநிலை வேறு எனவும், கருத்துக் கணிப்பை மீறி 2 தேர்தல்களில் தாங்கள் வெற்றி பெற்றிருப்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அமைச்சர் பல முக்கியமான கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார். அவரின் பேட்டியின் முழு விபரத்தை இங்கே காணலாம்.

 பெரிய தலைவர்கள் இல்லாத தேர்தல்

பெரிய தலைவர்கள் இல்லாத தேர்தல்

கேள்வி : பெரிய தலைவர்கள் இல்லாத தேர்தலை எப்படி பார்க்கிறீர்கள்

உலகத்தில் உள்ள அனைவரும் அம்மா என அழைக்கக் கூடிய ஒரே தலைவி இந்தியாவில் ஜெயலலிதாவை தவிர வேறு யாருமில்லை. மக்கள் நேசிக்கின்ற தலைவராக அவர் உள்ளார். நிதி குறைவாக இருந்த போதிலும் நான் அமைச்சராக இருந்த காரணத்தினால், இந்த தொகுதிக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள முடிந்தது.

 தேர்தல் அறிக்கை காப்பியா

தேர்தல் அறிக்கை காப்பியா

கேள்வி : அதிமுக.,வின் தேர்தல் அறிக்கை காப்பி என எதிர்க்கட்சிகள் சொல்கிறார்களே

நாங்கள் தேர்தலுக்கு முன்பே குடும்ப தலைவிகளுக்கு ரூ.1500, சிலிண்டர் விலை ஏறிக் கொண்டிருக்கிறது என்பதற்காக கூட்டுறவு சங்கத்தில் நீங்கள் எங்கே ரேஷன் பொருட்கள் வாங்குகிறீர்களோ அங்கு வாங்கிக் கொள்ளலாம் என ஆணை பிறப்பித்து விட்டோம் . ரூ.100 மானியம் எங்கே, 6 சிலிண்டர்கள் எங்கே. இதிலிருந்து யார் காப்பி அடித்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

 தேர்தலுக்கு முன்பே அறிவிப்பு

தேர்தலுக்கு முன்பே அறிவிப்பு

தேர்தல் வருவதற்கு முன்பே இந்த அரசு விவசாய கடன் ரூ.12,110 கோடி வழங்க அரசாணை பிறக்கப்பட்டது இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் நடந்தது. தேர்தல் அறிவிக்கப்பட்ட அன்று காலை, கூட்டுறவு சங்கங்களில் 6 பவுன் வரை வைத்த நகை கடன்கள் தள்ளுபடி செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதே போல் சுயஉதவிக்குழுக்களில் உள்ள மகளிர் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என உத்தரவிடப்பட்டது. தேர்தல் அறிக்கையில் இல்லை. தேர்தலுக்கு முன்பாகவே, 110 விதியின் கீழ் தமிழக அரசு அறிவித்து விட்டது.

 மக்கள் மனங்களை புரிந்த அரசு

மக்கள் மனங்களை புரிந்த அரசு

எங்கள் எண்ணங்களே வேறு கடந்த முறை பொங்கலுக்கு ரூ.1000 வழங்கினோம். கரும்புகள் 3 துண்டுகளாக வெட்டி வழங்கப்பட்டது. இந்த முறை ரூ.2000 வழங்கி உள்ளோம். முழு கரும்பும் வழங்கி உள்ளோம். இதெல்லாம் காப்பி இல்லை. நாங்கள் அடிப்படையிலேயே மக்களின் உணர்வுகளை புரிந்து, அவர்களுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். சேற்றிலே இறங்கி பணியாற்றி வந்தவர்கள் நாங்கள், அவர்களை போல் கரும்பு காட்டில் செல்ல மெட்டல் அணிந்து செல்லவில்லை. அதனால் எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை.

 நிலம் எங்கே இருக்கிறது

நிலம் எங்கே இருக்கிறது

அவர்களைப் போல் எல்லோருக்கும் 2 ஏக்கர் நிலம் என நாங்கள் சொல்லவில்லை. 2 செண்ட் நிலம் தான் தருவதாக கூறி உள்ளோம். 2 ஏக்கர் நிலம் என்றால், ஒரு கோடியே 72 லட்சம் பேர் நிலம் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு வழங்க எங்கே நிலம் இருக்கிறது. எதை நிறைவேற்ற முடியுமோ அதை மட்டும் தான் நாங்கள் சொல்லி இருக்கிறோம். எங்கள் தேர்தல் அறிக்கை மக்கள் மனங்களை கவருவதற்காக அல்ல. மக்கள் மனங்களை புரிந்து கொண்டு, மகிழ்ச்சியான வாழ்விற்கு தேவையான, அனைவரும் சமநிலை அடைய வேண்டும் என்பதற்காக தான் இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 மக்கள் மனநிலை வேறு

மக்கள் மனநிலை வேறு

கேள்வி : பெரும்பாலான கருத்துகணிப்புக்கள் திமுக வெற்றி பெறும் என கூறுகின்றனவே

ஜெயலலிதா சொன்னதை போல் கருத்து கணிப்பு வேறு மக்கள் மனநிலை என்பது வேறு. சொன்னது மட்டுமல்ல கருத்துகணிப்பிற்கு பிறகு 2 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார் என்பதை அறிவீர்கள். அனைவரும் எளிதில் அணுகக் கூடிய வகையில் தான் அமைச்சர்கள் முதல் முதல்வர் வரை இருக்கிறார்கள் என்பதை மக்கள் அறிந்துள்ளனர்.

அதிமுக.,வில் வாரிசு அரசியல் இல்லை

கேள்வி : வாரிசு அரசியல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்

எம்ஜிஆர்., காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி, இப்போதும் சரி வாரிசு அரசியல் கிடையாது என்பது தான் எங்கள் இயக்கத்தின் கொள்கையாக உள்ளது. அதை இதுவரை நிலை நிறுத்தி உள்ளோம். தொடர்ந்து நிலை நிறுத்த அனைவரும் இணைந்து செயலாற்றி வருகிறோம்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+