நாங்க பார்க்காத அடக்குமுறையா? தாங்கமாட்டீங்க- செந்தில் பாலாஜி விவகாரம்-முதல்வர் ஸ்டாலின் விஸ்வரூபம்!
சென்னை: தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அடுத்தடுத்து உக்கிரத்தைக் காட்டி வருகிறார் தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். திமுகவையோ திமுககாரனையோ சீண்டிப் பார்த்தால் தாங்கமாட்டீர்கள் என பாஜகவையும் மத்திய அரசையும் பகிரங்கமாக எச்சரித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை 10 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் கைது செய்தது. ஆனால் 18 மணிநேரம் விசாரணைக்குப் பின் நெருக்கடி கொடுத்து இதய பாதிப்பு ஏற்படும் நிலைக்கு தள்ளியதால் செந்தில் பாலாஜி கைது விவகாரம் இப்போது மிகப் பெரிய பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய போதே கடும் கண்டனத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின். அதனைத் தொடர்ந்து நேற்றும் ஒரு அறிக்கை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
திமுக அஞ்சாது: முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் சித்ரவதை செய்யும் நோக்கத்துடன் ஏன் செயல்பட வேண்டும்? இந்த வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி அமலாக்கத்துறை அதிகாரிகள் இவ்வளவு மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்டிருப்பது தேவையா? அதிகாரிகளை ஏவியவர்களின் குரூர சிந்தனை இதன் மூலம் வெளிப்படுகிறது. என்ன வழக்கோ அதனை சட்டப்படி செந்தில் பாலாஜி சந்திப்பார். எங்களது அரசியல் நிலைப்பாடு எதுவோ அதில் நாங்கள் உறுதியாகத் தொடர்வோம். இந்த வழக்கை சட்ட ரீதியாக தி.மு.க. உறுதியுடன் எதிர்கொள்ளும். பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. இந்த அடக்குமுறைகளை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என கூறியிருந்தார்.
சிபிஐ அனுமதி ரத்து: பின்னர் நேற்று மாலையே இனி தமிழ்நாட்டில் சிபிஐ விசாரணை நடத்த தமிழ்நாடு அரசின் ஒப்புதல் தேவை; இதுவரை சிபிஐ விசாரணை நடத்த கொடுத்த ஒப்புதலை திரும்பப் பெறுகிறது தமிழ்நாடு அரசு என இன்னொரு அதிரடி காட்டினார் முதல்வர் ஸ்டாலின். இப்படி சிபிஐக்கு கொடுத்த அனுமதியை ஏற்கனவே 9 மாநிலங்கள் வாபஸ் பெற்றுள்ளன. இப்போது தமிழ்நாடு 10-வதாக இணைந்துள்ளது.
குனியமாட்டோம்: இதனைத் தொடர்ந்து இன்று மிகவும் ஆவேசமான வீடியோ உரை ஒன்றையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் வழக்கமான பேச்சைவிட மிக கடுமையாக ஆக்ரோஷமாகவே முதல்வர் பேசி இருக்கிறார். இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில், எல்லாவற்றையும் பார்த்தவர்கள் நாங்கள். எங்களுக்கு என்று தனித்த அரசியல் கொள்கை கோட்பாடுகள் இருக்கின்றன. மதவாதம் சாதியவாதம், சனாதனம், பிறப்பால் உயர்வு - தாழ்வு, மேல் - கீழ், இந்த மாதிரியான மனித சமுதாயத்துக்கு விரோதமான பிற்போக்கு எண்ணங்களுக்கு எதிரானவர்கள் நாங்கள். இந்த சக்திகளை அரசியல் களத்தில் எதிர்கொள்வதுதான் எங்களின் வழக்கம். வாதங்களுக்கு வாதங்கள் வைக்கத் தயாராக இருக்கிறோம். அதை விடுத்து, மிரட்டிப் பணிய வைக்க நினைத்தால், குனிய மாட்டோம். நிமிர்ந்து நிற்போம்.! நேருக்கு நேர் சந்திப்போம்!
தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை! pic.twitter.com/MTA0suBkSh
— M.K.Stalin (@mkstalin) June 15, 2023
கொள்கைக்கான கட்சி: நாங்கள் ஆட்சிக்காக மட்டும் கட்சி நடத்துபவர்கள் இல்லை. நாங்கள் கொள்கைக்காகக் கட்சி நடத்துகிறவர்கள். கொள்கைகளைக் காப்பாற்றத்தான் கடைசிவரைக்கும் போராடுவோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறே இதற்கு சாட்சி! ஆதிக்க மனோபாவத்துடன் எதிர்த்தால், கொள்கைப் பட்டாளத்துடன் உறுதியோடு தடுப்போம். இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள், மிசா காலம் என, நாங்கள் பார்க்காத அடக்குமுறைகள் இல்லை, நாங்கள் நடத்தாத போராட்டங்கள் இல்லை. தி.மு.க. நடத்திய போராட்டங்கள் எப்படிப்பட்டது என்று வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். இல்லை என்றால் டெல்லியில் இருக்கும் மூத்த தலைவர்களைக் கேட்டுப் பாருங்கள். சீண்டிப் பார்க்காதீர்கள். தி.மு.க.வையோ - தி.மு.க.காரனையோ சீண்டிப் பார்த்தால் தாங்க மாட்டீர்கள். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை! என பகிரங்கமாகவே கூறியுள்ளார்.
அத்துடன் ஒவ்வொரு மாநிலத்திலும் நடந்த ரெய்டுகள், பாஜக ஆளும் மாநிலங்களை கண்டுகொள்ளாமல் விடுவது என அனைத்தையும் பட்டியல் போட்டு விளாசி இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். செந்தில் பாலாஜி விவகாரத்தில் அதிர்ச்சியில் இருக்கும் திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் இந்த வீடியோ புதிய தெம்பையும் திராணியையும் தரும் என்கின்றனர் அக்கட்சி சீனியர்கள்.
-
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி!












Click it and Unblock the Notifications