நீங்க என்னிடம் பேசுனீங்களா? அப்பறம் ஏன் இப்படி? - போராட்டக்காரர்களிடம் செந்தில் பாலாஜி பேசியது என்ன?
சென்னை: இன்று காலை நடைபெற்ற பார் உரிமையாளர்களின் போராட்டம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
Recommended Video
தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் இன்று மின்சாரத் துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினர். பார் டெண்டரில் முறைகேடு நடந்துவிட்டதாக கூறி போராட்டம் செய்தனர்.
பொற்கால ஆட்சியில் ஒரு பொல்லாத அமைச்சர்.. என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பார் உரிமையாளர்கள் போராட்டம் செய்தனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
இந்த நிலையில் போராட்டம் நடத்திய சில பார் உரிமையாளர்களை அமைச்சர் செந்தில் பாலாஜி தனியாக அழைத்து பேசினார். வீட்டிற்குள் அழைத்து செந்தில் பாலாஜி அவர்களிடம் குறைகளை கேட்டு ஆலோசனை செய்தார். இந்த நிலையில் இந்த ஆலோசனையில் என்ன பேசப்பட்டது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார்.

பார் டெண்டர் விளக்கம்
அதில், ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களின் பிரதிநிதிகள் 5 பேரிடம் பேசினேன் என்னிடம் இதை பற்றி முன்பே புகார் கொடுத்தீர்களா? என்று அவர்களின் கேட்டேன். என்னிடம் ஏன் மனு தரவில்லை? டாஸ்மாக் எம்டியிடம் இது தொடர்பாக மனு ஏதாவது அளித்தீர்களா என்று கேட்டேன்.

செந்தில் பாலாஜி பார்
7 மாதமாக இதை பற்றி ஏதாவது என்னிடம் பேசினீர்களா? என்று கேட்டேன். டெண்டரில் முறைகேடு நடக்கிறது என்று எங்காவது.. எப்போதாவது குற்றம்சாட்டினார்களா? என்று அவர்களிடம் கேள்வி எழுப்பினேன். அவர்கள் இல்லை என்றனர்.

எப்படி போராட்டம்
அப்படி இருக்கும் போது எந்த அடிப்படையில் நேரடியாக என்னுடைய வீட்டில் வந்து போராட்டம் செய்தீர்கள் . எதுவும் பேசவில்லை. இப்படி திடீரென போராட்டம் செய்தால் எப்படி பிரச்சனை சரியாகும். இதன் நோக்கம் என்ன என்று கேட்டேன்.

டாஸ்மாக்
எந்த கட்சிக்கும் டெண்டரில் பாகுபாடு, முன்னுரிமை அளிக்கப்படவில்லை. யார் வேண்டுமானாலும் டெண்டர் பார்ம் பெறலாம் என்றுதான் விதி உள்ளது. அப்படி இருக்கும் போது நாங்கள் யாரை புறக்கணித்தோம் என்று உங்களால் சொல்ல முடியுமா? இதை நிரூபித்தால் அதில் நடவடிக்கை எடுக்க தயார் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications