என்னை கைது செய்வதற்காகவே ஆவணங்களில் அமலாக்கத்துறை திருத்தங்கள் செய்துள்ளது: செந்தில் பாலாஜி பரபர மனு!
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, தன்னை கைது செய்யும் நோக்கில், ஆவணங்களில் அமலாக்கத்துறை திருத்தம் செய்துள்ளதாக பரபரப்பு புகார் மனுவை அளித்துள்ளார்.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து, புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை 15வது முறையாக, ஜனவரி 22ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
ஆவணங்களில் திருத்தம் செய்துள்ளனர்: இதற்கிடையே, தனக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தன்னை கைது செய்யும் நோக்கில், ஆவணங்களில் அமலாக்கத்துறை திருத்தம் செய்துள்ளதாகவும், தங்களுக்கு ஆவணங்கள் முழுமையாக வழங்காமல் விசாரணை தொடர்வது முறையற்றது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
செந்தில்பாலாஜியின் இந்த மனுவுக்கு ஜனவரி 22ஆம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். பின்னர், இந்த வழக்கில் செந்தில்பாலாஜி மீது ஜனவரி 22 அன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என அறிவித்த நீதிபதி அல்லி, அன்றைய தினம் அவரை நேரில் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளார்.
ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு: கைதாகி சுமார் ஏழு மாதங்கள் ஆகியும் செந்தில் பாலாஜிக்கு இன்னும் ஜாமீன் வழங்கப்படவில்லை. ஏற்கனவே ஜாமீன் கேட்டு இரு முறை மனு தாக்கல் செய்யப்பட்ட போதும் அவை தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, வருமான வரித்துறையின் சொத்து மதிப்பீட்டு குழுவினர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் கொங்கு மெஸ் மணி அவரது அலுவலகத்தில் நேற்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம்நகர் பகுதியில் புதிதாக கட்டி வரும் பிரம்மாண்ட பங்களாவில் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்?











Click it and Unblock the Notifications