நீங்க வேற.. பூட்டி வச்ச வீட்டுக்கு.. நான் கட்டுன கதை தெரியாதா.. ஓடி வந்து கவலைப்பட்ட கஸ்தூரி!
கரண்ட் பில் குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட் போட்டுள்ளார்
சென்னை: 2 "ஷாக்" அடிக்கும் நியூஸ் தமிழகத்தில் பரபரத்து வருகிறது.. கரண்ட் பில் அதிகமாக வந்தால், அதை பற்றி சொல்லுங்க என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.. அதேசமயம், தனக்கு கரண்ட் பில் இந்த மாசம் எவ்வளவு வந்திருக்கிறது என்று நடிகை கஸ்தூரி ட்வீட் போட்டுள்ளார்.
கடந்த மே மாதத்தில் இருந்து தொற்று பாதிப்பு தமிழ்நாட்டில் அதிகமாக இருந்தது.. இதனால், மின் ஊழியர்கள் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று, கரண்ட் பில் எவ்வளவு என்று கணக்கீடு செய்ய முடியாத நிலைமை வந்தது.
இதனால் 2019-ம் ஆண்டு மே மாதம் செலுத்திய மின் கட்டண தொகையையே நுகர்வோர் செலுத்தலாம் என மின்வாரியம் அறிவித்தது..

பதிவு கணக்கீடு
மேலும் புதிய நுகர்வோர் மார்ச் மாத கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும், ஜூலை மாதத்தில் மின்கட்டண பதிவு கணக்கீடு மீண்டும் மேற்கொள்ளப்படும் என்றும் மின்சாரத்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம் அதிகமாக வந்திருப்பதாக பரவலாக கூறப்படுகிறது.. வழக்கமாக வரும் பில்லைவிட, 2, 3 மடங்கு அதிகமாக வந்திருப்பதாக கூறுகிறார்கள்.. 4 மாதங்களுக்கு சேர்த்து கணக்கீடு செய்துள்ளதால் இவ்வாறு அதிக கட்டணம் வந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்..

வேதனை
இதுகுறித்து பயனாளி, இந்த மாசம் அதிகமாக பில் வந்திருப்பதாக ஒரு டிவி சேனலில் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.. அவரது வேதனையை பார்த்த அமைச்சர் செந்தில்பாலாஜி ஒரு ட்வீட் போட்டு அவருக்கு பதிலளித்துள்ளார்.. அதில், "பயனாளரின் மின் இணைப்பு எண், முகவரி, மண்டலம் பற்றி தெளிவாக குறிப்பிட்டால், தீர்வும் தெளிவும் ஏற்பட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ட்வீட்
இதைபார்த்த மக்களும், செந்தில்பாலாஜி ட்வீட்டுக்கு சென்று தங்கள் கரண்ட் பில், நம்பர்களை அதில் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டு வருகின்றனர்.. இந்நிலையில், காங்கிரஸ் பிரமுகரும், மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தியின் மகனுமான ராம சுகந்தன் செந்தில்பாலாஜியிடமும், மின்வாரியத்துறையிடமும் ஒரு சந்தேகம் கேட்டுள்ளார்.. அதில், "கடந்த இரண்டு மாதங்களுக்கான மின்சார கட்டண தொகை , குறைந்தபட்சம் இரு மடங்கு உயர்ந்துள்ளது, எவ்வாறு கணக்கீடு செய்யப்பட்டது என்று பொதுமக்கள் அனைவரும் குழம்பி உள்ளார்கள் ! தமிழக அரசு இதனை தெளிவுபடுத்த வேண்டுகிறேன்" என்று ட்வீட் போட்டு டவுட் கேட்டிருந்தார்.
|
ட்வீட்
இந்த ட்வீட்டுக்கு நடிகை கஸ்தூரி தன் ஆதங்கத்தை கொட்டி இன்னொரு ட்வீட் போட்டுள்ளார்.. அதில், "நீங்க வேற. மூணு மாசம் பூட்டி வச்சிருந்த ஃபிளாட்டுக்கு 500 rs bill கட்டுனேன் நானு ! #TNEB #" என்று புலம்பி உள்ளார்.. ஆக மொத்தம், கரண்ட் பில் பிரச்சனை தமிழக மக்களை குழப்பி அடித்து கொண்டிருக்கிறது.
-
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications